Home /News /international /

மக்களுக்கு சிரிக்கத் தடை விதித்த நாடு.. சத்தமாக அழவும் தடை

மக்களுக்கு சிரிக்கத் தடை விதித்த நாடு.. சத்தமாக அழவும் தடை

வடகொரியா

வடகொரியா

துக்க காலத்தில் வடகொரிய நாட்டு மக்கள் மது அருந்தவோ, சிரிக்கவோ கூடாது என அதிபரிடம் இருந்து உத்தரவு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    வடகொரியா நாட்டு மக்கள் 11 நாள்களுக்கு சிரிக்க கூடாது என அதிபர் கிங் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

    வடகொரியா எனும் மர்ம தேசத்தில் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத விஷயங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக அரங்கேறிக்கொண்டிருக்கும். நாட்டில் உணவு பஞ்சம் மக்கள் அளவோடு உணவு உண்ணுங்கள் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிபரிடம் இருந்து கட்டளை வந்தது. அதிபரிடம் இருந்து வரும் உத்தரவுகள் அனைத்தும் கட்டளைகள் தான் அதிபர்தான் கடவுள். அதை பின்பற்ற வேண்டியது மக்களின் விதி. உணவுக்கே  மூச்சு வாங்காதீர்கள் அதனையும் மிஞ்சும் ஒரு கட்டளையை தற்போது பிறப்பித்துள்ளார் அதிபர் கிங் ஜாங் உன்.

    நாட்டு மக்கள் யாரும் 11 நாள்களுக்கு சிரிக்கக் கூடாது என்பது தான் அந்த உத்தரவு. 2011-ம் ஆண்டு மறைந்த வட கொரிய முன்னாள் அதிபரும், கிம் ஜாங் உன்-னின் தந்தையுமான ஜிம்-ஜொங் -இல் அவர்களின் 10-ம் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டில் 11 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்காரணமாக நாட்டு மக்கள் யாரும் 11- நாள்களுக்கு சிரிக்கக் கூடாது என்பது அதிபரின் உத்தரவு.

    Also Read: Billie Eilish | ''11 வயதில் ஆபாச படம் பார்க்க ஆரம்பித்தேன். அது என்னை...'' - அனுபவம் பகிர்ந்த பிரபல பாடகி

    துக்க காலத்தில் வடகொரிய நாட்டு மக்கள் மது அருந்தவோ, சிரிக்கவோ, பொதுபோக்கு கொண்டாட்டங்களில் ஈடுபடவோ தடை விதிக்கப்படுகிறது. இதை எல்லாம் மக்கள் கடைப்பிடிப்பார்களா சிரிக்காம எப்படி இருப்பாங்கன்னு கேட்கறீங்களா.. வீட்டுக்கு வீடு வாசல்படி மாதிரி வீட்டுக்கு வீடு ராணுவ வீரர்கள், அரசு உளவாளிகள் இருப்பார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை கூறினால் நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள்.

    வடகொரியாவில் ஒரு வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. வீட்டில் இருந்த பெண் தீயில் சிக்கிக்கொண்ட குழந்தையை பத்திரமாக காப்பாற்றினார். நம் நாட்டில் இப்படி நடந்தால் என்ன செய்வார்கள். அந்த பெண்ணை அழைத்து விருது வழங்கி கெளரவிப்பார்கள்.

    அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்த வடகொரிய அதிகாரிகள் அந்தப் பெண்ணுக்கு தண்டனை வழங்கி சிறைப்பிடித்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அந்தப் பெண்ணின் வீட்டில் வைத்திருந்த முன்னாள் அதிபர்களின் போட்டோவை அவர் காப்பாற்றவில்லையாம். அந்த புகைப்படங்கள் தீயில் சேதமடைந்ததால் இந்த வழக்கு. வடகொரியாவில் அதிபர்களின் புகைப்படங்களை  வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது உத்தரவு.

    Also Read:  இந்தியாவில் 21.. மற்ற நாடுகளில் பெண்களின் திருமண வயது என்ன?

    இந்த 11 நாள் துக்க காலத்தில் யாரும் சிரிக்க கூடாது. துக்க காலத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அந்த வீட்டில் இருப்பவர்கள் சத்தமாக அழக்கூடாதாம். துக்க காலம் முடிந்த பின்னர் தான் உடலை அடக்கம் செய்ய வேண்டுமாம். அதுவரை உடலை வீட்டில் பத்திரமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாம்.

    பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கும் தடை. கடந்த காலங்களில் துக்க காலத்தில் குடித்துவிட்டு, கொண்டாட்டங்களில் ஈடுபட்ட சிலரை கைது செய்துள்ளனர். அதன்பின்னர் மக்களை அவர்களை பார்க்கவே இல்லையாம். இதுதான் வடகொரிய மக்களின் நிலை..
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Ban, Kim jong un, Laughing, North korea

    அடுத்த செய்தி