உலக நாட்டாமை அமெரிக்காவிற்கே குடைச்சல் கொடுத்து வரும் ஒரே நாடு என்றால் அது வட கொரியா தான். தனது அதிரடி நடவடிக்கைகளால் தினமும் அமெரிக்காவை எரிச்சலடைய வைத்துக் கொண்டே இருக்கிறார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன். அமெரிக்காவின் அச்சுறுத்தலை வடகொரிய அதிபர் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்திக் கொண்டு தான் வருகிறார். அந்த வகையில் நேற்று புதிதாக ஒரு ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் கிம்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய அணுசக்தி திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையைத் தான் வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளார் கிம். தங்களை தொடர்ந்து சீண்டினால் அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என அண்மையில் அமெரிக்காவிற்கு பகிரங்கமாவே மிரட்டல் விடுத்திருந்தார் கிம்.
வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. மிகவும் ஆபத்தான ஏவுகணை சோதனைகளை வடகொரிய நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், ஐநா பாதுகாப்பு அவை உடனடியாக இது குறித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்றுள்ள நீண்ட தூரம் பாயும் ஏவுகணை சோதனை ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் விதிமுறைகளுக்கு எதிரானது எனவும், இந்த ஏவுகணை சோதனை அந்தப் பிராந்தியத்தில் தேவையற்ற பதற்றத்தை தான் ஏற்படுத்தும் எனவும் அமெரிக்காவும் விமர்சத்திருக்கிறது. தென்கொரியாவுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா வடகொரியாவின் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை குற்றம் சாட்டி வருகிறது.
Also Read : நிதி நிலைமை சரியில்லை... மக்களே கார், டிவி, பிரிட்ஜ் எல்லாம் வாங்க வேண்டாம் - அமேசான் ஓனர் அறிவுரை
அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனக்கென ஒரு பாதையில் நடைபோட்டு வருகிறார் கிம் ஜோங் உன். அமெரிக்காவை நேரடியாக எதிர்ப்பதால், உலகில் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளான தலைவராக பார்க்கப்படுகிறார் கிம். அதனால் தான் அவருடை குடும்பம் பற்றிய தகவல்களை மிகவும் ரகசியமாக கையாள்கிறது அந்நாட்டு அரசு. கிம் ஜோங் உன்னிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளதாக நம்பப்படுகிறது. அவர்களில் ஒரு மகளின் புகைப்படம் ஏற்கனவே வெளியாகிருந்தது.
இந்நிலையில் கிம்-மின் மற்றொரு மகளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. நேற்று நடைபெற்ற ஏவுகணை சோதனைக்குச் சென்ற கிம் ஜோங் உன் தனது மகளின் கையைப் பிடித்தவாறு நடந்து செல்கிறார். அந்தப் புகைப்படங்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. மகளுடன் ஏவுகணையை பார்வையிடுவதைப் போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தன் மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தான் இப்போதைக்கு இணையத்தின் பேசு பொருள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kim jong un, North korea