குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பரிசோதித்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த வடகொரியா!

கடந்த ஒரு வாரத்திற்குள் 2வது முறையாக நடத்தப்படும் ஏவுகணை சோதனை இது என வடகொரியாவின் அண்டை நாடான தென்கொரியா தெரிவித்துள்ளது.

news18
Updated: May 10, 2019, 6:32 AM IST
குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பரிசோதித்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த வடகொரியா!
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்
news18
Updated: May 10, 2019, 6:32 AM IST
வடகொரிய ராணுவமானது 2 குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை இன்று பரிசோதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் உலக நாடுகளின் கண்டனங்களையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதனை செய்து வந்தது.

இது அமெரிக்காவுக்கு தலைவலியை கொடுக்க, இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.


பின்னர், கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜான் அன் ஆகிய இருவரும் சந்தித்து பேசினர்.

சந்திப்பில், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்ற வடகொரியா முன்வந்தது. இதையொட்டி இரு தரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதைத் தொடர்ந்து அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு வடகொரியா ஆக்கப்பூர்வமான வகையில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காதபோதும், ஏவுகணை சோதனைகளை நிறுத்தியது.

Loading...

கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாம் தலைநகர் ஹனோயில் மீண்டும் உச்சி மாநாடு நடத்தி இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இது தோல்வியில் முடிந்தது. ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகவில்லை. இதனால் இருதரப்பு உறவில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இந்நிலையில், வடகொரியாவின் வடக்கு பியாங்கன் பகுதியில் குறைந்த தொலைவு செல்லக்கூடிய இரு ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இவை 270 மற்றும் 420 கி.மீ. தொலைவுக்கு பறந்து சென்றுள்ளன. கடந்த ஒரு வாரத்திற்குள் 2வது முறையாக நடத்தப்படும் ஏவுகணை சோதனை இது என அண்டைநாடான தென்கொரியாவின் ராணுவம் தெரிவித்துள்ளது.
First published: May 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...