முகப்பு /செய்தி /உலகம் / ஒரே நாளில் 4 ஏவுகணை சோதனை.. மறைமுக மிரட்டல் விடுக்கும் வடகொரியா!

ஒரே நாளில் 4 ஏவுகணை சோதனை.. மறைமுக மிரட்டல் விடுக்கும் வடகொரியா!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வடகொரியா ஒரே நாளில் அடுத்தடுத்து 4 தொலைதூர ஏவுகணைகளை சோதனை நடத்தியது கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaPyongyangPyongyangPyongyang

கொரிய தீபகற்பத்தை மையமாகக் கொண்டு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கும் வடகொரியாவுக்கும் நீண்டகாலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தென்கொரியா வடகொரியா இடையேயான மோதல் விவகாரத்தில் தென்கொரியாவின் பக்கம் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் போன்றவை ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளன. வடகொரியா ஆதரவு தரப்பாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் உள்ளன.

குறிப்பாக இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் யுன் தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளின் ராணுவ வீரர்கள் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா ஒரே நாளில் 4 தொலைதூர ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதித்தது மிரட்டல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏவுகணைகளின் திறன் மற்றும் நம்பகத்தன்மையை பரிசோதித்தாக குறிப்பிட்டுள்ளது. கிழக்கு கடற்கரையில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் சுமார் 3 மணிநேரம் பறந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எங்க ஊருக்கு டூர் வந்தா ரூ.13,600 தருவோம்... பலே அறிவிப்பை வெளியிட்ட நாடு..!

மேலும் வடகொரியாவின் அணு ஆயுதப் போர் படைகளின் தயார் நிலையை, ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிரூபித்துள்ளதாக தெரிவித்தது. அனைத்து திசைகளில் இருந்தும் எதிரி படைகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் திறனை ஏவுகணை சோதனை வலுப்படுத்தியதாக வடகொரியா கூறியுள்ளது.

இதனால் கொரிய தீப கற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைக்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசு தொடர்ச்சியாக பல பொருளாதார தடைகளை விதித்த பின்னரும் வட கொரியா அஞ்சாமல் தனது அனு ஆயுத ஏவுகனை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.

First published:

Tags: Kim jong un, North korea, USA