முகப்பு /செய்தி /உலகம் / டாய்லெட்டுடன் சுற்றித்திரியும் வடகொரிய அதிபர்.. அதை யார் தொட்டாலும் சுட்டு விடுவாராம்!! - ரகசியம் என்ன?

டாய்லெட்டுடன் சுற்றித்திரியும் வடகொரிய அதிபர்.. அதை யார் தொட்டாலும் சுட்டு விடுவாராம்!! - ரகசியம் என்ன?

Kim john un

Kim john un

எந்த நாட்டுக்கு சென்றாலும் இந்த டாய்லெட்டை அவர் கையோடு தான் எடுத்துச் செல்வார். இந்த டாய்லெட்டை யார் பயன்படுத்தினாலும், தொட்டாலும் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடுவார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், பிரத்யேக போர்டபிள் டாய்லெட் ஒன்றை பயன்படுத்தி வருவதாகவும், எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும் அதை கையோடு எடுத்துச் செல்வார் எனவும், அதை யாராவது தொட்டாலே சுட்டுக் கொலை செய்துவிடுவார் எனவும் அந்நாட்டின் முன்னாள் கமாண்டோ படை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் இளம் அதிபர் கிம் ஜாங் உன், நவீன காலத்து சர்வாதிகாரியாக வர்ணிக்கப்படுகிறார். சின்ன விஷயங்களுக்கும் அவர் அளிக்கும் கடுமையான தண்டனைகள் உலகளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மிகவும் வித்தியாசமான நபரான கிம் ஜாங் உன்னின் செயல்களும் கவனம் ஈர்ப்பதாகவே உள்ளன. இதன் காரணமாகவே இவரைப் பற்றிய செய்திகளை மக்கள் தேடிப்படிக்கிறார்கள். சமீபத்தில் வடகொரிய அதிபராக 10 ஆண்டுகளை நிறைவு செய்ததுடன், தனது தந்தையின் 10வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, 11 நாட்களுக்கு யாருமே நாட்டில் சிரிக்கக் கூடாது என ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார்.

வடகொரியாவின் கமாண்டோ பிரிவின் முன்னாள் ஊழியர் ஒருவர் வாஷிங்டன் போஸ்ட் ஊடக செய்தியாளரிடம் பேசியபோது, கிம் ஜாங் குறித்த பல ஆச்சரியப்பட வைக்கும் தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியவை...

Also read:    2022ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் அமெரிக்கர் - குற்றமும்.. பின்னணியும்..

கிம் ஜாங் உன், பொதுக் கழிவறைகளை பயன்படுத்துவதை சில காலமாகவே நிறுத்திவிட்டார். அவர் போர்டபிள் டாய்லெட் ஒன்றை வடிவமைத்து அதை மட்டும் தான் பயன்படுத்துகிறார். எந்த நாட்டுக்கு சென்றாலும் இந்த டாய்லெட்டை அவர் கையோடு தான் எடுத்துச் செல்வார். இந்த டாய்லெட்டை யார் பயன்படுத்தினாலும், தொட்டாலும் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடுவார்.

தனது மலத்திலிருந்து தெரிந்துகொள்ளக் கூடிய தனது உடல்நலம் பற்றிய விஷயங்கள் வேறு யாருக்கும் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு அவர் செய்கிறார். தனது மலம், தவறானவர்களின் கைகளுக்கு சென்றுவிட்டால், அதனால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என அவர் கருதுவதாக அவர் தெரிவித்தார்.

Also read:  நீட் தேர்வில் வெற்றி பெற்ற தருமபுரி முதியவரின் மருத்துவ கனவு நிஜமாகுமா?

கிம் ஜாங் உன், தான் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களிலுமே விஷேச ஏற்பாடுகள், வசதிகளை செய்து வைத்திருக்கிறார். ஆனால் தற்போதெல்லாம், புல்லட் துளைக்காத மெர்சிடிஸ் பென்ஸ் காரை மட்டும் தான் அவர் பயன்படுத்துகிறார். அந்தக் காரிலும், போர்டபிள் டாய்லெட் பொருத்தப்பட்டுள்ளது என முன்னாள் கமாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

கிம் பயத்தின் பின்னணி:

கிம் ஜாங் உன்னுக்கு, உடல் எடை அதீதமாக அதிகரித்துள்ளது. அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் 4 மடங்கு அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். அவருடைய மலத்தில் இருந்து அவரின் உடல்நலன் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இயலும். அவருக்கு ஏதேனும் தீவிரமான நோய் இருப்பதாக தெரியவந்தால், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் அவரின் இமேஜ் பாதிப்படையலாம். அவரால் நீண்டகாலம் ஆட்சியில் இருக்க முடியாது என மக்கள் நினைக்கலாம்,

தன்னை ஒரு பவர்ஃபுல் மனிதர் என காட்டிக்கொள்ளும் கிம் ஜாங் உன், அதுபோன்ற ஒரு நிலை தனக்கு ஏற்படக் கூடாது என்ற எச்சரிக்கையின் காரணமாக கூட இப்படி நடந்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

First published:

Tags: Kim jong un, North korea