`வடகொரியா அணு ஆயுதங்களை அழிக்க ஒப்புதல்’- தென்கொரியா

வடகொரியா மற்றும் தென்கொரியா அதிபர்கள்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  வடகொரியாவில் உள்ள அணு ஆயுத ஏவுகணை சோதனைக் கூடங்களை வெளிநாட்டு நிபுணர்கள் முன்னிலையில் நிரந்தரமாக அழிக்க அந்நாடு சம்மதம் தெரிவித்துள்ளதாக தென்கொரியா கூறியுள்ளது.

  வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும், தென்கொரிய அதிபர் மூன் ஜே உன்னும் வடகொரியா தலைநகர் பியாங்கியாங்கில் நடைபெற்ற கொரிய உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  வடகொரியா அதன் முக்கிய அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நிரந்தரமாக அழிப்பதற்கு ஓப்புக் கொண்டுள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய தென்கொரிய அதிபர் மூன் ஜே உன் தெரிவித்தார். இரு நாடுகளும் கொரிய தீபகற்பத்தில் பரஸ்பரம் அமைதி காக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் மூன் ஜே உன் தெரிவித்தார்.

  வடகொரியா, அதன் முக்கிய அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை வெளிநாட்டு நிபுணர்கள் முன்னிலையில் நிரந்தரமாக அழிக்க அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் 2032 -ம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளை இணைந்து நடத்தவும் இரு நாட்டு அதிபர்களும் ஒப்புக்கொண்டனர். இந்த ஆண்டு இறுதிக்குள் வடகொரிய அதிபர் கிம், தென் கொரியா செல்லவும் முடிவு செய்யப்பட்டது.

  கொரியத் தலைவர்களின் உச்சி மாநாடு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
  வடகொரியா தனது நாட்டின் 70-வது ஆண்டு விழாவைக் கடந்த வாரம் கொண்டாடியது. இதில் அந்நாட்டின் ராணுவ சக்தியைக் காட்டும் சக்தி வாய்ந்த வாகனங்கள் இடம் பெற்றிருந்தன.

  ஆனால் இதற்கு முன்னர் வடகொரியா நடத்திய ராணுவ அணிவகுப்புகளில் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அந்நாட்டின் அணு ஆயுதங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த அணிவகுப்பில் அணு ஆயுதங்கள் இல்லாமல் வடகொரியா ராணுவ அணிவகுப்பை நடத்தியிருந்தது.

  முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதற்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

  ஆனால், எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இதனால் அமெரிக்கா அந்நாடு மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. எனினும் இதனை பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.

  இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது. இந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது.
  Published by:Saravana Siddharth
  First published: