Home /News /international /

அணு ஆயுதம் உபயோகத்திற்கு புதிய சட்டம் - வடகொரியா அதிபர் அறிவிப்பால் பரபரப்பு!

அணு ஆயுதம் உபயோகத்திற்கு புதிய சட்டம் - வடகொரியா அதிபர் அறிவிப்பால் பரபரப்பு!


வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்

வடகொரியாவிற்குப் பிற நாடுகளினால் போர் அச்சுறுத்தல் ஏற்பட்டால் உடனடியாக அல்லது தானாக அணு ஆயுதம் உபயோகப்படுத்த அங்கீகரிப்பதாக இந்த புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaNorth KoreaNorth KoreaNorth KoreaNorth KoreaNorth KoreaNorth KoreaNorth Korea
    வடகொரியாவில் போர் சூழலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை அதிபர் கிம் ஜாங் உன் ஏற்றியுள்ளார். இதனால் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அணு ஆயுத உபயோகத்தைக் கட்டுப்படுத்த பல நாடுகள் முன்மொழிந்து வரும் நிலையில் தற்போது வடகொரியா அணு ஆயுதம் பயன்படுத்தச் சட்டம் இயற்றியுள்ளது. வடகொரியாவின் அரசு ஊடகம் வெளியிட்ட தகவலின் படி, வடகொரியாவிற்குப் பிற நாடுகளினால் போர் அச்சுறுத்தல் ஏற்பட்டால் உடனடியாக அல்லது தானாக அணு ஆயுதம் உபயோகப்படுத்த அங்கீகரிப்பதாக இந்த சட்டம் குறிப்பிட்டுள்ளது.

    வடகொரியாவுக்கு தென்கொரியாவிற்கும் இடையே பல வருடங்களாக ஒத்துழையாமை சூழல் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே வடகொரியாவில் கொரோனா பரவ தென்கொரியா தான் கரணம் என்று கடுமையான எதிர்ப்புகளை வடகொரியா தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பல ஏவுகணை சோதனைகளையும் அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளையும் வடகொரியா நிகழ்த்தி வந்தது.

    வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே கடும் எதிர் கருத்துகள் நிலவி வரும் நிலையில் தற்போது இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. வடகொரியாவின் மீது எந்த விதமான தாக்குதல் நடத்தினாலும் உடனடியாக அணு ஆயுதத்தைப் பயன்படுத்த அங்கீகரித்து இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    Also Read : கணவர் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்படும் ராணி எலிசபெத் உடல்.. மீண்டும் இணையும் காதல் தம்பதி!

    மேலும் வடகொரியா நாட்டு பாராளுமன்றத்தில் அதிபர் கிம் ஜாங் உன் பேசுகையில் ,அணு ஆயுத உற்பத்தி மற்றும் சோதனைகளை நிறுத்தமாட்டோம் என்றும் மேலும் அதனை வலுப்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை எதிர்கொள்ள வடகொரியா தயாராகவுள்ளது என்றும் பேசியுள்ளார்.

    இந்த நிலையில் இந்த அறிவிப்பு உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் நாடு, வடகொரியாவின் இந்த சட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது உலக அமைதிக்கு ஒரு அச்சுறுத்தல் என்று கூறியுள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Kim jong un, North korea, Nuclear

    அடுத்த செய்தி