முகப்பு /செய்தி /உலகம் / கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா - மீண்டும் பதற்றம்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா - மீண்டும் பதற்றம்

வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Internat, IndiaNorth korea

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்யப்பட்ட காட்சிகளை வடகொரியா வெளியிட்டுள்ளதால், பதற்றம் அதிகரித்துள்ளது.

தென்கொரியா - அமெரிக்க படைகள் இணைந்து வாஷிங்டனில் அடுத்த வாரம் கூட்டு பயிற்சியில் ஈடுபடவுள்ளன. இதற்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திடீரென கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை செய்துள்ளது. அண்டை நாடுகளை தாக்காத வகையில் செங்குத்தாக ஏவப்பட்ட ஏவுகணை, கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பான் கடற்பகுதியில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நிலப்பரப்பை முழுமையாக தாக்கும் அளவுக்கு இந்த ஏவுகணை திறன் பெற்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இது அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்லும் வல்லமை பெற்றது என வடகொரியா கூறியுள்ளது.இதனிடையே, தென்கொரிய கடல் பகுதிகளில் அமெரிக்கா மற்றும் தென்கொரிய விமானப் படைகள் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டன. இதனால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

First published:

Tags: America, North and south korea, North korea, South Korea