அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் தோற்ற அதிகாரிகளை கொலை செய்த வடகொரியா?

வடகொரிய அதிபருக்கு எதிராக கிம் யோக் சோல் துரோகம் செய்ததை அடுத்து அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: May 31, 2019, 9:09 PM IST
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் தோற்ற அதிகாரிகளை கொலை செய்த வடகொரியா?
வடகொரிய அதிகாரி கிம் யோக் சோல்
Web Desk | news18
Updated: May 31, 2019, 9:09 PM IST
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் தோல்விகண்ட அதிகாரிகளை வடகொரிய அரசு கொலை செய்துவிட்டதாக தென்கொரிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

அமெரிக்கா- வடகொரியா இடையேயான மாநாட்டுப் பேச்சுவார்த்தையில் வடகொரிய அதிகாரிகள்  தோல்வியைத் தழுவி உள்ளனர். இரண்டாம் முறையாகவும் தோல்வி அடைந்த வடகொரியாவின் சிறப்புத் தூதரையே அந்நாடு கொலை செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்கான வடகொரிய சிறப்புத் தூதர் கிம் யோக் சோல் வடகொரியா அரசாலே கொலை செய்யப்பட்டுள்ளார் என தென்கொரிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.


வடகொரிய அதிபருக்கு எதிராக கிம் யோக் சோல் துரோகம் செய்ததை அடுத்து அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், கிம் யோக் சோல் உடன் கூடுதலாக 4 அதிகாரிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

 
First published: May 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...