உலக பெருந்தொற்றான கோவிட்-19 எதிர்கொள்வதில் பல்வேறு நாடுகள் ஒவ்வொரு யுக்தியை கையாண்ட நிலையில், வட கொரியா இந்த பெருந்தொற்றையும் தன் பாணியில் தனித்துவமாக கையாண்டது. அந்நாட்டு தனது கோவிட் பரிசோதனை, பாதிப்பு எண்ணிக்கையை வெளிப்படையாக உலகிற்கு காட்டவில்லை. மாறாக கோவிட் பாதிப்பு என்று குறிப்பிடாமல் காய்ச்சல் என கோவிட் பாதிப்பை மறைமுகமாக குறிப்பிடுகிறது.
இந்நிலையில்,வட கொரியா கோவிட் பாதிப்புக்கு எதிரான போரை வெற்றிகரமாக எதிர்கொண்டு கொரோனாவை வென்றுவிட்டதாக தற்போது தெரிவித்துள்ளது. இதை அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் யுன்னின் சகோதரியும், அதிபருக்கு அடுத்து இரண்டாவது அதிகாரம் மிக்க நபராக இருக்கும் கிம் யோ ஜோங்க் அறிவித்துள்ளார். பொது நிகழ்வு ஒன்றில் குழுமியிருந்த மக்களிடம் உரையாற்றிய கிம் யோ ஜோங்க், இந்த கோவிட் பாதிப்பை வட கொரியா வெற்றிகரமாக தாண்டி வந்துள்ளது.
இந்த பாதிப்பின் போது அதிபர் கிம் கடும் காய்ச்சலுக்கு ஆளானர். வட கொரியாவில் கொரோனா பரவலை திட்மிட்டே தென் கொரியா ஏற்படுத்தியது. இதற்கு அந்நாட்டிற்கு வட கொரியா தக்க பதிலடி தரும். உலக சுகாதார வரலாற்றில் அதிசயத்தை வட கொரியா நிகழ்த்தி காட்டியது. நமது வெற்றி என்பது வரலாற்று வெற்றியாகும் என்றார்.
BREAKING: North Korean TV airs video and audio of the leader’s sister Kim Yo Jong giving a speech for the first time. The audience is shown crying as she says Kim Jong Un had a fever during the COVID-19 outbreak and as she threatens South Korean authorities with "extermination" pic.twitter.com/BKuqv7GIiu
— NK NEWS (@nknewsorg) August 11, 2022
வட கொரியா தன்நாட்டின் கொரோனா பாதிப்பை கோவிட் பாதிப்பு என்று குறிப்பிடாமல், காய்ச்சல் பாதிப்பு என்றே குறிப்பிட்டு வந்தது. அந்நாட்டின் புள்ளி விவரப்படி கொரோனா காய்ச்சல் காரணமாக இதுவரை சுமார் 48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, வெறும் 74 உயிரிழப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆண்கள் கட்டாயம் இரண்டு திருமணம் செய்ய வேண்டும்.. ஆப்ரிக்க நாட்டில் விசித்திர சட்டமா.. உண்மை என்ன?
இந்நிலையில், ஜூலை 29ஆம் தேதிக்குப் பின் அந்நாட்டில் யாருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கொரோனாவை வட கொரியா வென்றுவிட்டதாகவும் தற்போது தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kim jong un, North korea