கொரோனா பெருந்தொற்று பரவல் 2 ஆண்டுகள் தாண்டிய பின்னரும் ஓயாமல் உலக நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தொற்றின் தாக்கம் ஓய்ந்தாலும், ஒரு சில நாடுகள் மீண்டும் மீண்டும் பாதிப்பை கண்டுவருகின்றன. கொரோனா முதல் முதலாக கண்டறியப்பட்ட சீனாவில், மீண்டும் கடந்த மாதத்தில் தொற்று தீவிரமாக பரவத் தொடங்கியது. இதன் காணமாக, ஒரு மாத காலத்தில் கடந்த 60,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகினர். ஜீரோ கோவிட் பாலிசி என தொடர் லாக்டவுன் யுக்தியை சீனா சோதனை செய்து பார்த்து அது பலனளிக்காமல் அதை கைவிட்டது. தற்போது அங்கு கோடிக்கணக்கான மக்களுக்கு கோவிட் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வடகொரியாவிலும் கடந்த சில நாள்களாக கோவிட் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் தலைநகர் பியோங்யாங்கில் 5 நாள்கள் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சில நாள்களாகவே மூச்சு திணறல் சார்ந்த நோய் பாதிப்பு தீவிரமடைந்து வந்தது. எனவே, லாக்டவுன் அறிவிப்பு வெளியாகும் என்ற பயத்தில் மக்கள் அதிக அளவில் உணவுப்பொருள்களை வாங்கி சேமிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில், மர்மக் காய்ச்சல் பரவலால் வருதால் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தலைநகர் பியாங்யாங்கில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த லாக்டவுன் மற்ற பகுதிகளிலும் விரைவில் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் யுன் ஆட்சி செய்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு கோவிட் பரிசோதனை, பாதிப்பு எண்ணிக்கையை வெளிப்படையாக உலகிற்கு காட்டுவதில்லை. மாறாக கோவிட் பாதிப்பு என்று குறிப்பிடாமல் காய்ச்சல் என கோவிட் பாதிப்பை மறைமுகமாக குறிப்பிட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Covid-19, Kim jong un, Lockdown, North korea