Home /News /international /

500 கி.மீ. தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது வட கொரியா

500 கி.மீ. தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது வட கொரியா

கடந்த ஆண்டு மட்டும், நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஏவும் ஏவுகணை, கப்பலில் இருந்து நீண்ட தொலைவுக்கு செலுத்தும் ஏவுகணை, ரயிலில் இருந்து ஏவப்படும் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை வடகொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
500 கி.மீ. தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வடகொரிய அரசு வெற்றிகரமாக சோதித்துள்ளது. புத்தாண்டில் நடத்தப்பட்ட முதல் ஏவுகணை சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இரும்புத் திரை நாடுகளில் ஒன்றாக கருதப்படும் வடகொரியாவில் கிம் ஜோங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்த நிலையில் இருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் கடந்த சில வாரங்களாக செய்தி வெளியிட்டு வந்தனர்.

இதையும் படிங்க : திவாலாகும் இலங்கை அரசு.. ஸ்தம்பித்த பொருளாதாரம் - மகிந்த ராஜபக்சே பதவி விலகல்?

இந்நிலையில் புத்தாண்டையொட்டி, உணவு உற்பத்தி மற்றும் பொருளாதார மேம்பாட்டில் அரசு அதிக கவனம் செலுத்தும் என்று வட கொரிய அதிபர் உறுதி அளித்ததாக தகவல்கள் வெளியானது.

உணவு பிரச்னை, பொருளாதார பாதிப்புகள் ஒருபக்கம் இருந்தாலும், வட கொரியா தனது ராணுவ வலிமையை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தனக்கு எதிரான போரை தவிர்க்கும் ஓர் முக்கிய நடவடிக்கையாக கருதி, ராணுவத்தை வடகொரியா வலிமைப்படுத்துகிறது.

இதையும் படிங்க : 60 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதார பணியாளர்களுக்கு 4-வது டோஸ் தடுப்பூசி போடும்பணியை இஸ்ரேல் நாடு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டில் முதன்முறையாக 500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அண்டை நாடான தென்கொரியாவின் பாதுகாப்பு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.

வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருவது என்பது வருத்தம் அளிப்பதாக ஜப்பான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசியல் லாபம் கருதி, வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தும் என்று சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளார்கள்.

இதையும் படிங்க : உலகில் 90 சதவீத அணு ஆயுதங்கள் அமெரிக்கா, ரஷ்யாவிடம் உள்ளன - சீனா

கடந்த ஆண்டு மட்டும், நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஏவும் ஏவுகணை, கப்பலில் இருந்து நீண்ட தொலைவுக்கு செலுத்தும் ஏவுகணை, ரயிலில் இருந்து ஏவப்படும் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை வடகொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளது.

தொடர்ந்து ஆயுதங்களை பரிசோதனை செய்து வருவதால் சர்வதேச நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. வடகொரியாவின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்ட ஐ.நா. அவை, பசிக் கொடுமையால் அந்நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தது.
Published by:Musthak
First published:

Tags: North korea

அடுத்த செய்தி