முகப்பு /செய்தி /உலகம் / புதிய ஆண்டிலும் ஏவுகணை சோதனையை தொடருகிறது வடகொரியா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

புதிய ஆண்டிலும் ஏவுகணை சோதனையை தொடருகிறது வடகொரியா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

வடகொரிய அதிபர்

வடகொரிய அதிபர்

இவ்வளவு களபரங்களுக்கு உலகில் உள்ள ஒரு நாடு, எப்போதும் போல தனது அடாவடி நடவடிக்கையில் மட்டும் கவனம் செலுத்துகிறது என்றால், அது வட கொரியா என்ற தேசமாக மட்டுமே இருக்க முடியும். 2022ஆம் ஆண்டிலும், வடகொரியாவின் குணாதியத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஒட்டுமொத்த உலகமும், கண்களுக்கே புலப்படாத மிக நுண்ணிய கொரோனா வைரஸ் கிருமியை கண்டு அஞ்சுகிறது. கோவிட் - 19 என பெயரிடப்பட்டாலும் 3 ஆண்டுகளை கடந்து கொரோனாவை எதிர்த்து முழுமையான வெற்றியை பெற முடியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது.

முதலில் ஒரு டோஸ், பிறகு இரண்டாம் டோஸ் என தொடங்கி தற்போது பூஸ்டர் டோஸ்-இல் வந்து நிற்கிறது. கண் இமை மூடாமல் சர்வதேச உலகம் கொரோனாவை ஒழிப்பதற்கான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வளவு களபரங்களுக்கு உலகில் உள்ள ஒரு நாடு, எப்போதும் போல தனது அடாவடி நடவடிக்கையில் மட்டும் கவனம் செலுத்துகிறது என்றால், அது வட கொரியா என்ற தேசமாக மட்டுமே இருக்க முடியும். மிகுந்த பேரழிவுகளை ஏற்படுத்தக் கூடிய அணு ஆயுதங்கள், ஏவுகணைகள் போன்றவற்றை பரிசோதனை செய்து, அதை பறைசாற்றிக் கொள்வது இந்நாட்டின் வழக்கம்.

2022ஆம் ஆண்டிலும், வடகொரியாவின் குணாதியத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. கடந்த வாரத்தில் மட்டும் வடகொரியாவில் 6 ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. சர்வதேச ஊடகங்களை விடுங்கள், வட கொரிய அரசின் ஊடகமே இதுபோன்ற செய்தியைத்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

மேலும் படிக்க :  ஒமிக்ரான் வைரஸால் அதிக பாதிப்பைச் சந்திக்கும் அமெரிக்கா: 10 லட்சம் உயிரிழப்பை எட்டும் எச்சரிக்கை

கப்பலில் இருந்து தொலைதூரம் பாய்ந்து செல்லும் ஏவுகணைகள் மற்றும் குறுகிய தொலைவில் பாயும் பாளிஸ்டிக் வகை ஏவுகணைகளை, அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு பரிசோதனை செய்துள்ளது என்று வடகொரிய அரசு ஊடகமான, கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்ஸி செய்தி வெளியிட்டுள்ளது.

Kim Jong-un
வடகொரிய அதிபர்

அதாவது, கப்பலில் இருந்து பாய்ந்து செல்ல, தங்களிடம் ஏற்கனவே இருந்த ஏவுகணையை மேம்படுத்தி, அதை தற்போது சோதித்து பார்த்திருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. ஜப்பான் கடல் பகுதியை ஒட்டி நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது 1,800 மைல்களை தாண்டி ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியது என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க :  மிகத் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் நியோகோவ் வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா? சீனாவின் எச்சரிக்கைக்கு ஐ.நா பதில்

இதேபோன்று, குறுகிய தொலைவு செல்லும் பாளிஸ்டிக் வகை ஏவுகணையின் வெடிப்பு திறனை மேம்படுத்தி, குறிக்கப்பட்ட தீபகற்ப பகுதியை தாக்கி சோதனை நடத்தியுள்ளது. ஆயுத உற்பத்தி கிடங்கை, அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிடுவது போன்ற புகைப்படங்களை அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வடகொரியா மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடைகளை நீக்குவது தொடர்பாக, வட கொரிய அரசு நிர்வாகமும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்த நெருக்கடி கொடுக்கும் விதமாக இந்த பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கலாம் என்று சர்வதேச பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், அதிபர் கிம் ஜாங் உன்-இன் நடவடிக்கைகள், புதிய பொருளாதார தடைகளை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளன என்று வடகொரியா குறித்த அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Kim jan Un, North korea