ஹோம் /நியூஸ் /உலகம் /

ஒரே வாரத்தில் 4வது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனை : கொரிய தீபகற்பத்தில் தொடரும் பதற்றம்!

ஒரே வாரத்தில் 4வது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனை : கொரிய தீபகற்பத்தில் தொடரும் பதற்றம்!

ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா!

ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா!

வட கொரியா தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக அவ்வப்போது ஆயுத சோதனைகளை செய்து வருகிறது. ஒரே வாரத்தில் வடகொரியா நேற்று 4வது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

வட கொரியா மற்றும் தென் கொரிய நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக பேச்சு வார்த்தைகள் நிறுத்தப்பட்ட நிலையில், வட கொரியா தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக அவ்வப்போது ஆயுத சோதனைகளை செய்து வருகிறது.

அணு ஆயுதங்களை சோதிக்க கூடாது என்று உலக அளவில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பாந்தத்தில் கையெழுத்திடாத நிலையில் ஆணு ஆயுதங்களையும் வடகொரியா சோதித்து வருகிறது.

பியோங்யாங் அதன் தடை செய்யப்பட்ட ஆயுதத் திட்டங்களை இரட்டிப்பாக்கியுள்ளது. இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான  சோதனைகளை நடத்தி, அதன் சட்டங்களைத் திருத்தியமைத்து, தன்னை "மீள முடியாத" அணுசக்தியாக அறிவிக்க இருக்கிறது. தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் நடத்தப்படும்  இதன் செயல்பாடுகளுக்கு தென் கொரியா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.

இன்று தொடங்கும் 'ஃபிட் இந்தியா ஃப்ரீடம் ரன் 3.0'! : ஃபிட்டாக மாற அழைப்புவிடும் அரசு !

இதன் தொடர்ச்சியாக இப்போது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கடந்த ஒரு வாரமாக வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணைகளை சோதித்து வருகிறது. கடந்த 25ம் தேதி முதல் வெவ்வேறு கட்டங்களாக 4 முறை ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவியது.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை வட கொரியா இரண்டு குறுகிய தூரம் பாய்ந்து இலக்குகளை தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. வடகொரியாவின் செயலுக்கு, அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன

தென் கொரியாவை வட கொரியாவிடம் இருந்து பாதுகாக்க அமெரிக்கா சுமார் 28,500 துருப்புக்களை நிறுத்தியுள்ளது. மேலும் பாதுகாப்பு மேம்பாட்டிற்காக கூட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த செயலை கண்டித்து அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாடா கொரியாவிற்கு வரும்போது ஒரு சோதனை நடத்தப்பட்டது. அவர் தென் கொரியாவிலிருந்து பறந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இரண்டாவது சோதனை நடத்தப்பட்டது.

உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது.. அதிபர் விளாதிமிர் புதின் அறிவிப்பு

கமலா ஹாரி வருவதற்கு முன்னதாக வாஷிங்டனின் அணுசக்தியால் இயங்கும் யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கி கப்பலை தென் கொரியாவுக்கு அனுப்பியது. இந்த செயலால் ஆத்திரமடைந்தே வாடா கோரிய தனது ஏவுகணை சோதனைகளை தொடங்கியதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

"இது ஒரு போரின் முன்னெடுப்பாக தெரிகிறது. வட கொரியா அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முயற்சித்தால், அது தென் கொரியா-அமெரிக்க கூட்டணி ராணுவத்தின் உறுதியான, பதிலடியை எதிர்கொள்ளும்" என்று தென்கொரிய ஜனாதிபதி யூன் கூறினார்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: North korea, South Korea, Test