தென் கொரியாவுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா

news18
Updated: May 16, 2018, 10:43 PM IST
தென் கொரியாவுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்
news18
Updated: May 16, 2018, 10:43 PM IST
தென் கொரியாவுடன் இன்று நடைபெறவிருந்த உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தையை வடகொரியா திடீரென ரத்து செய்துள்ளது. அமெரிக்காவுடனான கூட்டு ராணுவப் பயிற்சியே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அண்மையில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையிலான உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தென்கொரியா, அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளதைக் குறிப்பிட்டு, வடகொரியா பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. ராணுவ கூட்டுப்பயிற்சி தொடர்ந்தால், அமெரிக்க அதிபர் டிரம்புடன் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையை ரத்து செய்ய நேரிடும் என்றும் வடகொரியா எச்சரித்துள்ளது.

இந்நிலையில், கூட்டு ராணுவ பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அடுத்த மாதம் 12-ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கிம் ஜோங் உன் சந்தித்துப் பேசமாட்டார் என வடகொரியா எச்சரித்துள்ளது.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்