முகப்பு /செய்தி /உலகம் / Kim Ju-ae : "ஒரு வாரம்தான் டைம்... உடனே பெயரை மாற்றுங்க...“ - வடகொரியா அதிபரின் அதிரடி உத்தரவு!

Kim Ju-ae : "ஒரு வாரம்தான் டைம்... உடனே பெயரை மாற்றுங்க...“ - வடகொரியா அதிபரின் அதிரடி உத்தரவு!

கிம் ஜாங் உன்

கிம் ஜாங் உன்

ஜியோங்ஜு நகரத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம், 'ஜு ஏ' என்ற பெயரில் குடியுரிமைப் பதிவுத் துறையில் பதிவுசெய்யப்பட்ட பெண்களை அவர்களின் பெயர்களை மாற்ற பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வரவழைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai |

வடகொரியா நாடு சர்ச்சைகளுக்கு பெயர்போனது. அரசியல், சட்டம், ஒழுங்குமுறை, தண்டனைகள் என்று எல்லாமே அங்கு கொஞ்சம் வித்தியாசமாகதான் நடக்கும். பள்ளியில் குழந்தைகள் அமர்ந்து படிக்க பெஞ்சுக்கு கூட கட்டணம் செலுத்தவேண்டும், அரசு நிர்ணயித்துள்ள ஹேர் ஸ்டைல்தான் நாடு மக்கள் வைக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னவர்கள் இப்போது ஒரு படி மேலேபோய் ஜு ஏ (Ju Ae) என்ற பேரை மக்கள் வைத்துக்கொள்ள தடை விதித்துள்ளது.

வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன் அந்நாட்டில் ஒரு அடக்குமுறை சட்டத்தை அமல்படுத்தி வருகிறார் என்பது வெளிப்படையாகவே தெரியும். அவரது சொல்தான் அங்கு வேத வாக்கு. அவர் தற்போது தனது மகளது பெயரை வேறு யாரும் வைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். கிம் ஜாங் உன்னின் மகளின் அதே பெயரைக் கொண்ட  பெண்களை வேறு ஏதாவது பெயருக்கு  மாற்றும்படி கட்டாயப்படுத்துகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிம் ஜாங் உன்னின் மகளின் பெயர் ஜு ஏ. அவளுக்கு சுமார் பத்து வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. அவரது பெயர் நாட்டில் உள்ள வேறு யாருக்கும் இருக்க கூடாது என்ற எண்ணத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் சில நாட்களுக்கு முன்பு, ஜியோங்ஜு நகரத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம், 'ஜு ஏ' என்ற பெயரில் குடியுரிமைப் பதிவுத் துறையில் பதிவுசெய்யப்பட்ட பெண்களை அவர்களின் பெயர்களை மாற்ற பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வரவழைத்ததாக  தகவல் வெளியானது.

மற்ற நகரங்களில் உள்ள பெண்களுக்கும் ஒரு வாரத்திற்குள் தங்களது  பெயர்களை மாற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுமட்டும் அல்லாமல் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, வட கொரியா மக்கள் அதன் தலைவர்கள் மற்றும் அவர்களின் உடனடி குடும்பங்களின் பெயர்களைப் பயன்படுத்துவதையும் தடை செய்துள்ளது.

இதற்கு முன்னதாக  2014 ஆம் ஆண்டு கிம் ஜாங் உன் தனது பெயரை மக்கள் வைத்திருப்பதை தடை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அரசை சார்ந்த நபர்களின் மதிப்பும் மரியாதையும் கவுரவமும் காப்பாற்றப்படும் என்று நம்புகிறார். அதை மீறி அந்தப் பெயர்களை வைத்திருந்தால் தீவிர தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கிம் ஜாங் உன்னிற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆனால் ஜு ஏ மட்டுமே பொது இடங்களுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். ஊடகங்களுக்கு கிம் ஜாங் உன்னின் மகள் என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளார். முதன்முதலில் கடந்த ஆண்டு நவம்பரில் பொது இடத்தில் அடையாளப்படுத்தப்பட்ட ஜு ஏ,  இராணுவ முகாமின் ஒரு ஆடம்பர விருந்திலும் காணப்பட்டார்.   அதற்கு பின்னர், தற்போது  வட கொரியாவின் இராணுவ அணிவகுப்பின்போது மக்கள் முன்னிலையில் பங்கேற்றார்.

First published:

Tags: North korea