Home /News /international /

இனி முகக்கவசம் கட்டாயம் இல்லை.. ஒரு வழியாக கொரோனாவில் இருந்து இயல்புக்கு திரும்பிய வடகொரியா...

இனி முகக்கவசம் கட்டாயம் இல்லை.. ஒரு வழியாக கொரோனாவில் இருந்து இயல்புக்கு திரும்பிய வடகொரியா...

வட கொரியா அறிவிப்பு தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் தங்கை கிம் யோ ஜா

வட கொரியா அறிவிப்பு தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் தங்கை கிம் யோ ஜா

நாட்டின் எல்லைப் பகுதியைத் தவிர அனைத்து பகுதிகளுக்கும் இது பொருந்தும், மேலும் சமூக இடைவெளி, தடுப்பு நடவடிக்கைகளும் அகற்றப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    வடகொரியா நாட்டில் தலைவர் கிம் ஜாங் உன், கொரோனாவிற்கு எதிராக வடகொரியா வென்று விட்டதாக அறிவித்ததன் தொடர்ச்சியாக  தற்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அறிவித்துள்ளது.

    வடகொரியா தலைநகர் பியோங்யாங்கில் இருந்து வெளியிட்ட தகவலில், வடகொரியாவின் கொரோனா பரவ தென்கொரியாவே காரணம் என்று குற்றம் சாட்டியது. மேலும் தேவைப்பட்டால் தென் கொரியா அதிகாரிகளை அளித்துவிடுவோம் என்று மிரட்டியது. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு விட்டதாகக் கூறியுள்ளனர்.

    கடந்த மே மாதம் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று அறிவித்த நிலையில் குறைந்த காலத்திலேயே இப்படி ஒரு அறிவிப்பு வந்துள்ளது. மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பு நாட்டின் எல்லைப் பகுதியைத் தவிர அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும், மேலும் சமூக இடைவெளி, தடுப்பு நடவடிக்கைகளும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வடகொரியா மக்களைத் தேவையற்ற விஷயங்களிலிருந்து விழிப்புடன் இருங்கள் என்று தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பில் அவர்கள் தென் கொரியாவைக் குறித்துள்ளனர்.

    Also Read : புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து .. ஆபத்தான நிலையில் சிகிச்சை

    தென் கொரியாவிலிருந்து சிலர் வட கொரியா எல்லைகளில் பலூன் மூலம் தென் கொரியப் பிரச்சார கொள்கைகளைச் சிறு துண்டுகளில் அனுப்பி வைப்பார். வட கொரியா அதனால் தான் எங்கள் நாட்டில் கொரோனா பரவியது என்று குற்றம் சாட்டியுள்ளது.

    தலைவர் கிம் ஜாங் உன் தங்கையான கிம் யோ ஜாங் கூறுகையில் தலைவரே இதனால் பாதிக்கப்பட்டு அதிக காய்ச்சலுக்கு ஆளானார் என்று வெளிப்படுத்தியாக கூறியுள்ளார். வட கொரியாவில் மொத்தம் 4.8 மில்லியன் மக்களுக்குக் காய்ச்சல் அறியப்பட்ட போதிலும் அதில் வெறும் சிறிதளவே கொரோனா பாதிப்பு உடையவர்கள் என்று தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் வெறும் 74 பேரே கொரோனா பாதிப்பில் இறந்ததாகக் கூறியுள்ளது.

    Also Read : போலீசாரிடம் சிக்காமல் இருக்க கரடி பொம்மைக்குள் ஒளிந்து கொண்ட திருடன்.. அடுத்து நடந்தது?

    இதனைப் பல நிபுணர்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில் அவர்களின் தடுப்பு முறைகளைக் கேள்வி எழுப்பினர். வட கொரியா உலகிலேயே மிகக் குறைந்த மருத்துவ வசதி கொண்டது என்றும், சீனாவிடம் இருந்து சிறிய அளவில் தடுப்பு ஊசி பெற்று இருந்தாலும் 26 மில்லியன் ஜனத் தொகையில் அனைவருக்கும் தடுப்பு ஊசி போட வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
    Published by:Janvi
    First published:

    Tags: Corona, Corona Mask, North korea

    அடுத்த செய்தி