உலகம் எவ்வளவு மக்களின் சுதந்திரம், உரிமை என்ற புரட்சிகள் நோக்கி மாறினாலும் இன்றும் வடகொரியாவில் சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ளன. அதிபருக்கு வருத்தம் என்றால் நாடே வருத்தமாக இருக்க வேண்டும் என்பது போன்ற செயல்முறைகளை மேற்கொண்டு வருகிறது.
மனிதர்களின் எதேர்சை உணர்ச்சியான சிரிப்பை கூட தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது வடகொரியா அரசு.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அவரது தந்தை மரணத்திற்கு துக்கம் அனுசரிப்பதற்காக அந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அவரது தந்தையும் வடகொரியாவின் முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல் இறந்த 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. நினைவு தினத்தை முன்னிட்டு 11 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த சில மாதங்களில் 10 லட்சம் பேர் உயிரிழக்கலாம்.. பகீர் கிளப்பும் கொரோனா! என்ன நடக்கிறது சீனாவில்?
அது மட்டுமல்லாமல், இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாதாம். மெதுவாகவே அழவேண்டுமாம். இந்த தடையை மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று வடகொரியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இப்படியான கடும் கட்டுப்பாடுகளைக் கண்டு ஒரு வேளை, இந்த துக்க அனுசரிப்பால் 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்திருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களது பிறந்தநாளைக் கூட கொண்டாட முடியாது போல தோன்றுகிறது என்று அந்நாட்டு ஊடகங்கள் நக்கல் காட்டி பதிவிட்டுள்ளன.
மக்களுக்கு சிரிப்பு, அழுகை என்பது எல்லாமே இயல்பாக வரக்கூடியது. அதற்கு தடை விதித்தது மட்டும் அல்லாமல் மீறினால் மரண தண்டனை என்பது எல்லாம் மிகவும் அதிகம் தான் என இணையவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kim jong un, North korea