வடகொரியாவின் 70-வது ஆண்டு தின கொண்டாட்டம் நிறைவு

news18
Updated: September 11, 2018, 8:13 AM IST
வடகொரியாவின் 70-வது ஆண்டு தின கொண்டாட்டம் நிறைவு
வடகொரியாவின் ஜோதி பேரணி.
news18
Updated: September 11, 2018, 8:13 AM IST
வடகொரியாவின் 70-வது ஆண்டு தினத்தையொட்டி நடத்தப்பட்ட ஜோதி பேரணி பார்வையாளர்களைக் கவர்ந்தது.

தென்கொரியாவிலிருந்து பிரிந்து தனி நாடாக வடகொரியா உருவானதன், 70-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்றன. பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.கொண்டாட்டத்தின் இறுதி நாளான நேற்று, ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஜோதி பேரணி நடத்தினர். இதில், வல்லமைபொருந்திய நாடு என்ற அர்த்தம் கொண்ட கொரிய மொழி வார்த்தைப்படி, மாணவர்கள் அணிவகுத்து நின்றனர்.


அப்போது, கோலாகல வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. மேலும் பலூன்கள் பறக்கவிடப்பட்டு ராணுவ டேங்குகள் அணிவகுப்பும் நடத்தப்பட்டன. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து, 70-ம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தன. வழக்கமாக ராணுவ பலத்தை வெளிப்படுத்த நடத்தப்படும் அணிவகுப்பு. இம்முறை அதிபர் கிம் ஜாங் உன்னின் பொருளாதார கொள்கைகளை பறைசாற்றும் விதத்தில் அமைந்திருந்தது.
First published: September 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...