Home /News /international /

உக்ரைன் போர் தாக்கம்.. 14 ஆண்டுகளுக்கு பின் நூடுல்ஸ் விலை உயர்வு

உக்ரைன் போர் தாக்கம்.. 14 ஆண்டுகளுக்கு பின் நூடுல்ஸ் விலை உயர்வு

14 ஆண்டுகளுக்குப் பின் தாய்லாந்தில் நூடில்ஸ் விலை உயர்வு

14 ஆண்டுகளுக்குப் பின் தாய்லாந்தில் நூடில்ஸ் விலை உயர்வு

Thai Noodles : தாய்லாந்து நட்டின் அடிப்படை உணவு பண்டமான நூடுல்ஸ் விலை உக்ரைன் போரின் தாக்கம் காரணமாக 14 ஆண்டுகளுக்குப் பின் உயர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaBankokBankok
    ரஷ்யா-உக்ரைன் போர் தாக்கமானது சர்வதேச அரங்கில் பல்வேறு விதமாக எதிரொலித்து வருகின்றது. ஐரோப்பிய பிராந்தியத்தில் பாதுகாப்பு சார்ந்த அச்சம் தலைத் தூக்கிய நிலையில், பெரும்பாலான நாடுகளில் இந்த போரானது உணவு தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற அடிப்படை சிக்கல்களுக்கும் காரணமாக மாறியுள்ளது.

    உலகின் முன்னணி கோதுமை உற்பத்தி நாடான உக்ரைனில், போர் காரணமாக உற்பத்தி முற்றாக தடைபட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே உற்பத்தியான கோதுமையும் வர்த்தக ஏற்றுமதி, இறக்குமதி செய்ய முடியால் தேக்கம் கண்டுள்ளன. இது ஆசியா, ஆப்ரிக்கா  நாடுகளில் பெரும் விலைவாசி உயர்வு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. கோதுமை மாவை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் உணவான நூடுல்ஸ் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அடிப்படை உணவாகவும் உள்ளது.

    மேலும், தாய் நூடுல்ஸ் என்ற உணவு சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற பிராண்டாக உள்ளது. இவ்வாறு அந்நாட்டின் அடிப்படை உணவு பண்டமான நூடுல்ஸ் விலை இந்த போரின் தாக்கம் காரணமாக 14 ஆண்டுகளுக்குப் பின் உயர்ந்துள்ளது. உக்ரைன் நாட்டின் போர் காரணமாக அந்நாட்டின் பணவீக்க விகிதம் 14 ஆண்டுகள் இல்லாத உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக கோதுமை, பாமாயில் எண்ணெய் போன்ற உணவு பொருள்கள் விலை வெகுவாக உயர்ந்துள்ளது.

    இதையும் படிங்க: வைரலான டான்ஸ் வீடியோ.. போதைப்பொருள் பயன்படுத்தினாரா பின்லாந்து பிரதமர்? ஆய்வில் தெரியவந்த தகவல்

    எனவே, தாய்லாந்து அரசு 14 ஆண்டுகளுக்குப் பின் அந்நாட்டின் பணத்தின் மதிப்பில் ஒரு பாக்கெட் நூடுல்ஸ் விலையை 6 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த புதிய விலையானது இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் நூடுல்ஸ் விலை உயர்ந்துள்ள நிலையில்,சீனாவிலும் கோதுமை விலை 30 சதவீதம் உயர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Inflation, Russia - Ukraine, Thailand

    அடுத்த செய்தி