Home /News /international /

இந்தியர்கள் யாரும் உக்ரைன் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்படவில்லை: மத்திய அரசு விளக்கம்

இந்தியர்கள் யாரும் உக்ரைன் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்படவில்லை: மத்திய அரசு விளக்கம்

இந்திய மாணவர்கள்

இந்திய மாணவர்கள்

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான ஆலோசனை குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

    உக்ரைனில் இருந்து வியாழக்கிழமை ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு 19 விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இந்தியர்கள் யாரும் உக்ரைன் ராணுவத்தால் சிறைபிடிக்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

    ரஷ்ய படையெடுப்பால் உக்ரைன் நாட்டில் ஆபத்தான சூழல் நிலவுகிறது. ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். மீட்பு பணி தொடங்கிய முதல் 4 நாட்களில் 15 விமானங்களில் 3,352 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

    இந்நிலையில், ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 200 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இந்திய விமானப்படைக்கு சொந்தமான முதல் விமானம் டெல்லி ஹிண்டன் விமானப் படை தளத்தில் புதன்கிழமை இரவு தரை இறங்கியது. அங்கு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் இந்தியர்களை வரவேற்றார்.

    இதையும் படியுங்கள் :  52 வயதில் மறுமணம் செய்து கொண்ட தாய்... முழு மனநிறைவுடன் மகன் பகிர்ந்த புகைப்படம்!

    இதேபோன்று புகாரெஸ்ட், சுசேவா, கோசிஸ், புடாபெஸ்ட், செஸோவ் ஆகிய நகரங்களில் இருந்து ஒரே நாளில் 3 ,726 இந்தியர்களை 19 விமானங்களில் தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், ஹங்கேரி, ருமேனியா, போலந்து, ஸ்லோவேகியா நாடுகளில் இருந்து உக்ரைன்வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் டெல்லி மற்றும் மும்பையில் தரையிறங்கின. மீட்பு விமானத்தில் பயணித்த இந்தியர்கள் ஒரு சிலர் தங்களது வளர்ப்பு நாய், பூனை போன்ற செல்லபிராணிகளை அழைத்து வந்தனர்.

     உக்ரைனின் கார்கிவ் நகரில் சிக்கியுள்ள இந்தியர்கள் புதன்கிழமைக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்ட நிலையில், ரயில் நிலையத்தில் இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கார்கிவ் ரயில் நிலையத்தில் தமிழக மாணவர்கள் உட்பட 4 ஆயிரம் பேர் காத்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவத்தினர் பிணை கைதிகளாக பிடித்து வைத்து மனித கேடயங்களாக பயன்படுத்தி வருவதாக ரஷ்யா தெரிவித்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.

    இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, கார்கிவ் மற்றும் அண்டை பகுதிகளில் உள்ள இந்திய மாணவர்களை நாட்டின் மேற்கு பகுதிக்கு அழைத்து செல்ல சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உக்ரைன் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

    இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான ஆலோசனை குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல்காந்தி, உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி தாமதமாக தொடங்கியதாக குற்றம்சாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியர்களை மீட்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Russia, Russia - Ukraine

    அடுத்த செய்தி