• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இலக்கியத்துக்கான நோபல் பரிசு- எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிப்பு

இலக்கியத்துக்கான நோபல் பரிசு- எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிப்பு

அப்துல் ரசாக்

அப்துல் ரசாக்

2021-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 4-ம் தேதியிலிருந்து அறிவிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல் பிரிவில் நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவத்துக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கும், வேதியியலுக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கும், இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.


    அதன்படி, இலக்கியத்துக்கான நோபல் பரிசு தன்சானியா நாட்டைச் சேர்ந்த அப்துல் ரசாக்குக்கு அவருடைய வாழ்வுக்குப் பிறகு(after lives) நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது. After lives நாவல், சமரசமில்லாமல் காலணித்துவத்தின் விளைவுகள், வளைகுடா பகுதிகளின் அகதிகளின் தலைவிதிகள் போன்ற உணர்வுகளை உள்ளடக்கிய ஒன்றாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: