2020-ம் ஆண்டைவிட 2021-ம் ஆண்டு மோசமானதாக இருக்கும் - உலக உணவுக் கழகம் எச்சரிக்கை

2020-ம் ஆண்டைவிட 2021-ம் ஆண்டு மோசமானதாக இருக்கும் என்று உலக உணவுக் கழகம் எச்சரித்துள்ளது.

2020-ம் ஆண்டைவிட 2021-ம் ஆண்டு மோசமானதாக இருக்கும் - உலக உணவுக் கழகம் எச்சரிக்கை
டேவிட் பேஸ்லி
  • Share this:
உலக அளவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் தொடர்ந்துவருகிறது. இந்தநிலையில், கடந்த உலக உணவுக் கழகத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதுகுறித்து அசோசியேட்டட் ப்ரஸ் நிறுவனத்துக்கு உலக உணவுக் கழகத்தின் தலைவர் டேவிட் பேஸ்லி பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், ‘ஐ.நா அமைப்புக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது, உலக நாடுகளை எச்சரிப்பதற்கு ஒரு வாய்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த வருடம், இந்த ஆண்டை விட மோசமானதாக இருக்கும். 2021-ம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் பஞ்சம் ஏற்படும். அதனைச் சமாளிக்க பில்லியன் கணக்கான டாலர் செலவிட வேண்டிய தேவையுள்ளது. கொரோனா பாதிப்பைவிட அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து ஊடகங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டதால், உலக அளவில் நாம் எதிர்கொள்ளும் பாதிப்புகள் கவனம் பெறவில்லை.

எனவே, இந்த நேரத்தில் நோபல் பரிசு கிடைத்தது மகிழ்ச்சியானது. உலக நாடுகளின் தலைவர்கள் பொருளாதார உதவி மற்றும் பிற உதவிகள் செய்ததன் காரணமாக நம்மால் 2020 ஆண்டில் பஞ்சத்தை தவிர்க்க முடிந்தது. கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கிறது. குறைந்த மற்றும் நடுத்த வருமானம் கொண்ட நாடுகளில் பொருளாதாரம் தொடர்ந்து சரிவைச் சந்திக்கும்.


இன்னொரு முழு ஊரடங்கு அலை இருக்கிறது. 2020-ம் ஆண்டு கையிருப்பு இருந்த பணம், 2021-ம் ஆண்டில் இருக்காது. இன்னும், 12 முதல் 18 மாதங்களுக்கு இதேபோன்ற அசாதாரண சூழல் இருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
First published: November 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading