இந்தியருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு..!

உலக அளவில் வறுமை ஒழிப்புக்கான அணுகுமுறைகளை வழங்கியமைக்காக அபிஜித்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு..!
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு
  • News18
  • Last Updated: October 14, 2019, 3:36 PM IST
  • Share this:
இந்தியர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசுகள் ஒவ்வொரு துறைக்கும் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. கடைசி அறிவிப்பாக இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசுகளிலேயே இடையில் செருகப்பட்ட ஒரு பரிசாகவே பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு விளங்கி வருகிறது.

1901-ம் ஆண்டு முதல் நோபல் பரிசுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், 1968-ம் ஆண்டு முதலே பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இம்முறை பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பேருக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் க்ரெமெர் ஆகிய மூவரும் வென்றுள்ளனர். அபிஜித் பானர்ஜி கொல்கத்தாவில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுள்ளார். கொல்கத்தாவின் பிரசிடென்ஸி கல்லூரியிலும் டெல்லி நேரு பல்கலைக்கழகத்திலும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும் கல்வியை நிறைவு செய்துள்ளார்.

உலக அளவில் வறுமை ஒழிப்புக்கான அணுகுமுறைகளை வழங்கியமைக்காக அபிஜித்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: 
First published: October 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்