இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கவைச் சேர்ந்த கவிஞர் லூயிஸ் க்ளூக்கிற்கு அறிவிப்பு

Nobel Prize in Literature 2020 : 2020ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கவைச் சேர்ந்த கவிஞரும், கட்டுரையாளருமான லூயிஸ் க்ளூக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கவைச் சேர்ந்த கவிஞர் லூயிஸ் க்ளூக்கிற்கு அறிவிப்பு
லூயிஸ் க்ளூக்
  • News18
  • Last Updated: October 8, 2020, 8:30 PM IST
  • Share this:
2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நாள்தோறும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் கடந்த நாட்களில் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இலக்கியத்துறையில் அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞரான லூயிஸ் க்ளுக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெறும் 4வது பெண் லூயிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 1943 ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த லூயிஸ் தற்போது கேம்பிரிட்ஜில் வாழ்ந்து வருகிறார். கவிஞர் என்பதை கடந்து New Havenல் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.  1968 ஆம் ஆண்டு First Born என்ற புத்தகத்தின் மூலம் இலக்கிய உலகில் அறிமுகமான லூயிஸ்,விரைவில் சமகால அமெரிக்க இலக்கியவாதிகளில் முக்கியமானவராக உயர்ந்தார்.



இவர் எழுதிய கவிதைகளும், கட்டுரைகளும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.  1992ஆம் ஆண்டில் இவர் எழுதிய தி வைல்ட் ஐரிஸ் என்ற புத்தகத்தில் இவரது வர்ணனை அனைவரையும் ஈர்த்தது. இலக்கியத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை அமைதிக்கான நோபல் பரிசும். சனிக்கிழமை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளன
First published: October 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading