இயற்பியலுக்கான நோபல் பரிசு! மூன்று பேருக்கு அறிவிப்பு

இயற்பியலுக்கான நோபல் பரிசு! மூன்று பேருக்கு அறிவிப்பு
2019-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள்
  • News18
  • Last Updated: October 8, 2019, 3:58 PM IST
  • Share this:
2019-ம் ஆண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு, இயற்பியலாளர்கள் ஜேம்ஸ் பீப்லெஸ், மிச்செல் மேயார், டிடியர் குயல்ஸ் ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் பொருளாதாரம், அமைதி, இயற்பியல், மருத்துவம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு ஸ்வீடிஸ் நாட்டைச் சேர்ந்த அமைப்பு சார்பாக ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டுவருகிறது. 2019-ம் ஆண்டு, நோபல் பரிசு பெறுபவர்களுக்கான விவரங்கள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.

நேற்று, மருத்துவத்துறையில் நோபல் பரிசு பெறப்போகும் மூன்று பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இன்று, இயற்பியலுக்கான பிரிவில் நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பேரண்டம் குறித்த ஆய்வுக்காக ஜேம்ஸ் பீப்லஸுக்கும், சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக மிசெல் மேயார் மற்றும் டிடியர் குயல்ஸுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


BREAKING NEWS:Also see:

First published: October 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்