பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிப்பு

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பால்.ஆர் மில்க்ரோம், ராபர்ட் வில்சன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிப்பு
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்றவர்கள்
  • Share this:
மருத்துவம், பொருளாதாரம், இயற்பியல், வேதியியல், அமைதி உள்ளிட்ட பிரிவுகளில் உலக அளவில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு, கடந்த திங்கட்கிழமை சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் வெளியாக தொடங்கியது. முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஹெபாடைடிஸ்-சி வைரசை கண்டுபிடித்த விஞ்ஞானிகளான ஹார்வே ஜே. ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ், மைக்கேல் ஹாக்டன் ஆகிய 3 பேர் மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெறுவதாக நோபல் பரிசு அகாடமி அறிவித்தது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு கருந்துகளை உருவாக்கம், நட்சத்திர மண்டலத்தின் காணப்படும் அதிசய பொருள் கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்காக ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு ஜென்சல், ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

வேதியியலுக்கான நோபல் பரிசை இம்மானுவேல் சர்பென்டியர், ஜெனிபர் டவுட்னா ஆகிய 2 பெண் விஞ்ஞானிகள் கூட்டாக பெறுகிறார்கள். இலக்கியத்திற்கான நோபல் பரிசை, அமெரிக்க பெண் கவிஞர் லூயிக்லுக்கிற்கு அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவு அமைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.


இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏல கோட்பாட்டின் மேம்பாடு, ஏலத்துக்கான வடிவமைப்பு ஆகியவற்றை உருவாக்கியதற்காக இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: October 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading