மரபணு மாற்ற தொழில்நுட்பத்தில் ஆய்வு: வேதியியலுக்கான நோபல் பரிசு இரு பெண் ஆய்வாளர்களுக்கு பகிர்ந்தளிப்பு

நடப்பாண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு, புதிய மரபணு மாற்றம் செய்யும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக இரண்டு பெண் ஆய்வாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

மரபணு மாற்ற தொழில்நுட்பத்தில் ஆய்வு: வேதியியலுக்கான நோபல் பரிசு இரு பெண் ஆய்வாளர்களுக்கு பகிர்ந்தளிப்பு
வேதியியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள்
  • Share this:
2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அதன் படி பிரான்ஸை சேர்ந்த பெண் வேதியியல் ஆய்வாளர் இமானுவேல் சார்பென்டியர் மற்றும் அமெரிக்க பெண் ஆய்வாளர் ஜெனீஃபர் டவுனா ஆகியோருக்கு விருது வழங்கப்படுவதாக நோபல் அமைப்பின் பொதுச்செயலாளர் கோரன் கே ஹான்சன் அறிவித்தார்.

CRISPR-Cas 9 என்ற மரபணு கத்தரிக்கும் நுட்பம் என்பது மரபணுக்களை மாற்றும் நுட்பத்தில் துல்லியமானதாகும். நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நுட்பத்தின் உதவியுடன் விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் மரபணுக்களில் மிகச்சரியாக மரபணு சங்கிலியை வெட்டி மாற்ற முடியும். இந்த நுட்பத்தின் உதவியுடன் தாவரங்களின் இனப்பெருக்க தன்மையை மாற்றியமைக்க முடியும்.

Cas 9 நுட்பத்தின் மூலம் புற்றுநோய் சிகிச்சை மிக கச்சிதமாக செய்யமுடியும் என்று நோபல் பரிசு வழங்கும் குழு அறிவித்துள்ளது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள 2 பெண் விஞ்ஞானிகளுக்கும் சேர்த்து இந்திய மதிப்பில் 8 கோடியே 20 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது.


இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமையும், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும் அறிவிக்கப்பட உள்ளன.
First published: October 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading