• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!

 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!

நடப்பு ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தேர்வுக்குழுவினர் இன்று அறிவித்தனர்.



    அதில், அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்ட், ஜோஸ்வா டி ஆங்க்ரிஸ்ட் மற்றும் கெய்டோ டபிள்யூ. இம்பென்ஸ் ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக ராயல் சுவீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அறிவித்துள்ளது.

    தொழிலாளர்களின் பொருளாதாரம் குறித்த பங்களிப்பிற்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச ஊதியம், குடியேற்றம் மற்றும் கல்வி ஆகியவற்றின் தொழிலாளர் சந்தை விளைவுகளை பகுப்பாய்வு செய்துள்ளதற்காக டேவிட் கார்ட்டுக்கு ஒரு பாதியும், மற்றொரு பாதி ஜோசுவா டி. ஆங்கிரிஸ்ட் மற்றும் கைடோ டபிள்யூ இம்பென்ஸ் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: