சமச்சீரற்ற உடல்உறுப்பு வினையூக்கிகளை கண்டறிந்ததற்காக இரண்டு பேருக்கு இந்த ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைத் தொடர்ந்து, வேதியியலுக்கான நோபல் பரிசை, நோபல் பரிசு குழு இன்று அறிவித்தது.
இதன்படி, ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட், பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. உடல் உறுப்புகளை ஊக்குவிக்கும் வகையில், உலோகங்கள், நொதிகள் ஆகியவை மட்டுமே இருப்பதாக ஆய்வாளர்கள் கருதிவந்த நிலையில், மூன்றாவது வகையை கண்டறிந்ததற்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. எளிதான உடல் உறுப்பு மூலக்கூறு அடிப்படையில் வினையூக்கியை டேவிட் மேக்மில்லன் கண்டறிந்தார்.
Also Read : 25 ஆண்டுகளில் முதல் முறை.. டொனால்ட் ட்ரம்புக்கு ஏற்பட்ட பெரும் சரிவு!
புரோலின் எனப்படும் அமினோ அமிலம் மூலம் வினையூக்கி சிறப்பாக செயல்படுவதை பெஞ்சமின் லிஸ்ட் கண்டறிந்தார். இவர்களது கண்டுபிடிப்புகள் மூலம், வேதியியலை பசுமையானதாக மாற்ற முடியும் என்றும், புதிய மருந்து ஆராய்ச்சிக்கு உதவும் என்றும் நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.