Nobel Peace Prize 2020 | ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐநா-வின் உலக உணவுத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Nobel Peace Prize 2020 | ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
உலக உணவு அமைப்பு
  • News18
  • Last Updated: October 9, 2020, 5:41 PM IST
  • Share this:
மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளைத் தொடர்ந்து, அமைதிக்கான நோபல் பரிசை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நோபல் பரிசு குழு இன்று அறிவித்தது. இதில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐநா-வின் உலக உணவுத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பரிசுக் குழுவின் தலைவர் பெரிட் ரெய்ஸ்-ஆண்டர்சன் அறிவித்தார்.

அப்போது அவர், போருக்கான ஆயுதமாக பசியை பயன்படுத்துவதைத் தடுக்க உலக உணவுத் திட்டம் பங்களிப்பை செய்துள்ளதாக தெரிவித்தார்.  வன்முறைகளுடன் கொரோனா பெருந்தொற்றும் ஏற்பட்டதால் ஏமன், காங்கோ, நைஜீரியா, தெற்கு சூடான், பர்கினோ பசோ ஆகிய நாடுகளில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும்,

அவர்களுக்கு தேவையான உதவிகளை உலக உணவுத் திட்டம் வழங்கியதாகவும் ஆண்டர்சன் கூறினார். உணவு பாதுகாப்பு வழங்குவது என்பது, வறுமையைத் தடுப்பதுடன், அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.


உலக உணவு அமைப்புக்கு விருது வழங்குவதன் மூலம், பசியால் வாடும் கோடிக்கணக்கான மக்களின் பக்கம் உலகின் பார்வையை திருப்ப விரும்புவதாகவும் தேர்வுக்குழு தலைவர் கூறினார்.
First published: October 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading