எத்தியோப்பிய பிரதமருக்கு 2019-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!

எத்தியோப்பியாவில் மிக இளவயது பிரதமராக ஆட்சி செய்து வருபவர் அபி அகமது என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தியோப்பிய பிரதமருக்கு 2019-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற அபி அகமது
  • News18
  • Last Updated: October 11, 2019, 6:06 PM IST
  • Share this:
2019-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான எரித்திரியா உடன் நீண்ட காலமாக நீடித்துவந்த சச்சரவுகளைக் களைய முயற்சியெடுத்த எத்தியோபியா பிரதமர் அபி அகமதுக்கு 2019-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

“அமைதியை நிலைநாட்டவும் சர்வதேச ஒற்றுமைக்காகவும்ம் பல முயற்சிகளை எடுத்துள்ளார். எத்திரியா உடனான எல்லைப் பிரச்னைக்கும் தீர்வு கண்டுள்ளார். இதற்காகவே அபி அகமதுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்” என நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது.


கடந்த ஏப்ரல் 2018-ம் ஆண்டில் பிரதமராகப் பதவியேற்ற அபி அகமது தன்னுடைய 43-ம் வயதில் ஆண்டுக்கணக்காக நீடித்து வந்த எத்தியோப்பியா- எத்திரியா பதற்றத்தைத் தீர்கக் காரணமாக அமைந்துள்ளார். எத்தியோப்பியா- எத்திரியா எல்லைப் பிரச்னை கடந்த 1998-2000 ஆண்டு காலகட்டத்தில் தீவிரமாக இருந்தது.

கடந்த ஆண்டுதான் இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவும், வான்வெளி போக்குவரத்தும் தொடங்கப்பட்டு உள்ளது. எத்தியோப்பியாவில் மிக இளவயது பிரதமராக ஆட்சி செய்து வருபவர் அபி அகமது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: வேதியியலுக்கான நோபல் பரிசு! மூன்று பேருக்கு அறிவிப்புபளிச்சென்று காட்சியளிக்கும் மாமல்லபுரம்!
First published: October 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்