அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்ப்பதற்காக தனது தாயகமான பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலிபானுடன் பொதுவான சித்தாந்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் குழுவான பாகிஸ்தானிய தலிபானின் போராளிகள், பெண் கல்விக்கான மலாலாவின் பிரச்சாரத்தை எதிர்த்து அவரைத் தலையில் சுட்டபோது அவருக்கு 15 வயதுதான்.
அவர் உயிர்காக்கும் சிகிச்சைக்காக பிரிட்டனுக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பிறகு, உலகளாவிய கல்வி தேவைக்கு குரல்கொடுக்கத் தொடங்கினர். மலாலா, அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற இளையவர் என்ற பெருமையும் கொண்டார்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேறியவர் 10வது ஆண்டு நிறைவுக்குப் பிறகு, பாகிஸ்தானின் கராச்சிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வார் என்று செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பாலின சமத்துவத்தை பாராட்டும் சர்வதேச பெண் குழந்தை தினம் இன்று..!
"பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் தாக்கத்தில் சர்வதேச கவனத்தை ஒருமுகப்படுத்தவும், முக்கியமான மனிதாபிமான உதவியின் அவசியத்தை வலுப்படுத்தவும் உதவுவதே அவரது வருகையின் நோக்கம்" என அவரது மலாலா நிதியம் அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதியை தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் உள்ளது. எட்டு மில்லியன் மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் அவர்கள் இப்போது சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் $28 பில்லியன் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள மலாலாவின் சொந்த ஊரான மிங்கோராவில் வன்முறை அதிகரிப்பு தொடர்பாக அவரது முன்னாள் பள்ளி மாணவர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட நிலையில் யூசுப்சாயின் வருகை அமைந்துள்ளது.
சர்வதேச பெண் குழந்தை தினம் : இப்போது மூன்று பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு கணக்கு திறக்கலாம்
ஆப்கானில்ஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து அந்நாட்டை ஒட்டிய பாகிஸ்தான் பகுதிகள் வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. திங்களன்று, ஒரு ஓட்டுநர் சுட்டுக் கொல்லப்பட்டார் மற்றும் பள்ளி பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு குழந்தை காயமடைந்தது. 2,000 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்புகளை விட்டு வெளியேறத் தூண்டியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.