நோபல் பரிசு வழங்கும் விழா.. எளிமையாகத் துவங்கியது..

நோபல் பரிசு வழங்கும் விழா.. எளிமையாகத் துவங்கியது..

நோபல் பரிசு - கோப்புப் படம்

இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கும் விழா, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மிக எளிமையாக தொடங்கியுள்ளது.

 • Share this:
  ஐரோப்பிய நாடான, சுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, மருத்துவம், பொருளாதாரம், ரசாயனம் உள்ளிட்ட, 12 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, சுவீடன் தலைநகர், ஸ்டாக்ஹோமில், ஆண்டுதோறும், டிசம்பர் 10ஆம் தேதி நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அமைதிக்கான நோபல் பரிசு விழா மட்டும், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெறும்.

  ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக, சாதனையாளர்களுக்கு, தனித்தனியாக அந்தந்த நாடுகளிலேயே நோபல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதலாவதாக , வேதியியலுக்கான நோபல் பரிசு நேற்று வழங்கப்பட்டது. பிரான்சின் இமானுவேல் சார்பென்டெர், அமெரிக்காவின் ஜெனிபர் தவுத்னா ஆகியோர், இப்பரிசை பகிர்ந்து கொண்டனர்.

  ஜெர்மனி தலைநகர் பெர்லினில், சுவீடன் தூதரகத்தில் நடந்த எளிய விழாவில், இமானுவேல் சார்பென்டருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதேபோல், வாஷிங்டனில் ஜெனிபர் தவுத்னாவுக்கு, நோபல் பரிசு வழங்கப்பட்டது.

  மேலும் படிக்க...விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு குறித்து ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக திமுக தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த நிர்வாகி கைது..

  இந்தாண்டு அக்டோபரில், நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட சாதனையாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: