Home /News /international /

''உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை'' : உதவிக்கரம் நீட்டும் போலந்து

''உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை'' : உதவிக்கரம் நீட்டும் போலந்து

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஆப்ரேஷன் கங்கா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆபரேஷன் தொடர்ந்து நடைபெறும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.

போர் நடைபெற்று வரும் உக்ரைனில் இருந்து தங்கள் நாட்டிற்குள் வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று போலந்து அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்தியாவுக்கான போலந்து தூதர் ஆடம் புராகோஸ்கி கூறுகையில், 'உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கிருந்து இந்தியா திரும்பும் நோக்கத்தோடு போலந்து நாட்டிற்கு வரும் இந்தியர்களுக்கு விசா ஏதும் தேவையில்லை' என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், அண்டை நாட்டிற்கு தரைமார்க்கமாக வரும் இந்தியர்களை அங்கிருந்து விமானம் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது. அந்த வகையில் ரொமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 198 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு 4 வது இந்திய விமானம் டெல்லிக்கு தற்போது புறப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஆப்பரேஷன் கங்கா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆபரேஷன் தொடர்ந்து நடைபெறும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார். முன்னதாக 240 பேருடன் 3வது இந்திய விமானம் டெல்லிக்கு இன்று காலை திரும்பியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே உக்ரைனின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. உக்ரைனின் 975 ராணுவத்தளங்களை அழித்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் 471 உக்ரைன் ராணுவத்தினரை கைது செய்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க - உக்ரைனில் மேலும் 2 முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா!

உக்ரைன் அரசை ரஷ்யா பெலாரசுவுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் உக்ரைன் அரசு அதனை ஏற்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க - உயிரை துச்சமென கருதி சரணடைய மறுத்த 13 உக்ரைன் வீரர்கள்.. ரஷ்ய படையினரால் சுட்டுக் கொலை!

உக்ரைன் மீது ரஷ்யா ஆக்ரோ‌ஷ தாக்குதல் நடத்துவதால் மக்கள் மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதைகள், பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். பலர் உயிர் தப்பிக்க உக்ரைனில் இருந்து வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி