ஹோம் /நியூஸ் /உலகம் /

படபடவென ஆடிய கட்டடம்.. இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!

படபடவென ஆடிய கட்டடம்.. இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!

நிலநடுக்கம்

நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் இது 7.6 ஆக பதிவானது. இந்தோனேஷியாவின் அம்பன் தீவிலிருந்து 427 கிலோமீட்டர் தொலைவில், 95 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.17 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திமோர், மலுகு, பப்வா உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. சில கட்டடங்கள் நிலநடுக்கத்தால் ஆடின. இதேபோல, ஆஸ்திரேலியாவிலும் டார்வின் உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டது. மேலும் 5 புள்ளி 5 அலகுகளாக பிந்தைய அதிர்வுகளும் இருந்ததாக இந்தோனேஷிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது. கடும் நிலநடுக்கத்தால், மக்கள் பீதியடைந்தனர். எனினும், சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. இதற்கு முன்பு, ஜாவா தீவுப் பகுதியில் கடந்த நவம்பர் 21-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 602 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Earthquake