Home /News /international /

பாக். பிரதமர் இம்ரான் கானின் பதவி தப்புமா? நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

பாக். பிரதமர் இம்ரான் கானின் பதவி தப்புமா? நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தானில் இன்று மிக முக்கியமான நாள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானின் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. இதனால் பாகிஸ்தான் முழுவதும் பரபரப்பு காணப்படுகிறது.

தொழில் முறையில் கிரிக்கெட் வீரராக இருந்த இம்ரான் கான், கேப்டனாக இருந்து பாகிஸ்தானுக்கு 1992-ல் உலகக்கோப்பையை பெற்றுத் தந்தவர். அவர் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் என்ற கட்சியை ஆரம்பித்து 2018-ல் ஆட்சியை பிடித்தார்.

பாகிஸ்தானில் எந்த பிரதமரும் தனது ஆட்சி காலத்தை முழுமை செய்தது கிடையாது. அந்த வரலாற்றை இம்ரான் கான் மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது கூட்டணி கட்சிகளுக்குள் பிரச்னை ஏற்பட்டு, தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் வரை நிலைமை வந்துள்ளது.

இதையும் படிங்க - ''இந்திய பாஸ்போர்ட்டை உலக நாடுகள் மதிக்கின்றன'' : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் குறைந்தது 172 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இம்ரான் கானின் அரசு நீடிக்கும். தற்போது அவருக்கு கூட்டணி கட்சிகள் உள்பட 179 பேரின் ஆதரவு உள்ளது. இதில் 10-க்கும் அதிகமானோர் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் இன்று மிக முக்கியமான நாள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க - சவுதி, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் ரமலான் நோன்பு தொடங்கியது... மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனை

நேற்று மாலை முதலே ஆளும் கட்சியினர் பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கினர். அவர்கள் அமைதிகாக்குமாறு இம்ரான் கான் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இம்ரான் கானுக்கு எதிராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் பி.எம்.எல்.-என் கட்சியும், பாகிஸ்தான் பீப்பிள் பார்ட்டி கட்சியும் களத்தில் உள்ளன. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிடுவேன் என்று கூறியுள்ள இம்ரான் கான் இதுபற்றி கட்சியினர் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
Published by:Musthak
First published:

Tags: Imran khan

அடுத்த செய்தி