Home /News /international /

பிரதமர் பதவியை காப்பாற்ற போராடும் இம்ரான் கான்.. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல்..

பிரதமர் பதவியை காப்பாற்ற போராடும் இம்ரான் கான்.. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல்..

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது

Pakistan PM Imran Khan | பொருளாதாரத்தை மிக மோசமாக கையாண்டார், பணவீக்கம், விலை வாசி உயர்வு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இம்ரான் கான் மீது சுமத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானை பொறுத்தவரையில் இதுவரை எந்தவொரு பிரதமரும் முழுமையாக 5 ஆண்டுகள் பதவிக் காலத்தில் நீடித்தது கிடையாது

மேலும் படிக்கவும் ...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருவதால் பதவியைக் காக்க இம்ரான் கான் போராடி வருகிறார்.

முன்னதாக இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன. ஆனால் இதனை ஏற்பதற்கு இம்ரான் கான் மறுத்து விட்டார். என்ன நடந்தாலும் தான் பதவி விலக மாட்டேன் என்று இம்ரான் கான் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பொருளாதாரத்தை மிக மோசமாக கையாண்டார், பணவீக்கம், விலை வாசி உயர்வு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இம்ரான் கான் மீது சுமத்தப்பட்டுள்ளன. தன்னை எதிர்த்த அரசியல்வாதிகள் பலரை இம்ரான் கான் சிறைக்குள் தள்ளினார் என்பது உள்ளிட்ட புகார்களும் இம்ரான் கான் மீது இருக்கிறது.

இதையும் படிங்க - ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும்: ஜோ பைடன் எச்சரிக்கை

நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சியை சேர்ந்த எம்பிக்கள் சிலரே அவருக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டிக்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது இம்ரான் கானின் பிடிஐ கட்சி தலைமையிலான கூட்டணிக்கு 179 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. பிடிஐ கட்சியை சேர்ந்த 155 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

இதையும் படிங்க - உக்ரைன்- ரஷ்யா போர்: ஐ.நா பொதுசபையில் மீண்டும் நடந்த வாக்கெடுப்பு.. புறக்கணித்த இந்தியா!

இதன் அடிப்படையிலும், சமீபத்திய பிரச்னைகளின் அடிப்படையிலும் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சி பலவீனமாக உள்ளது. எதிர்க்கட்சிக்கு 163 உறுப்பினர்கள் உள்ள நிலையில் அவர்கள் பெரும்பான்மை பெறுவதற்கு 9 உறுப்பினர்களின் ஆதரவை தேவை.

பாகிஸ்தானில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2023-ல் நடைபெறவுள்ளது. ஆட்சி கவிழ்ந்தால் அடுத்து உடனடியாக தேர்தல் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

பாகிஸ்தானை பொறுத்தவரையில் இதுவரை எந்தவொரு பிரதமரும் முழுமையாக 5 ஆண்டுகள் பதவிக் காலத்தில் நீடித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Musthak
First published:

Tags: Imran khan

அடுத்த செய்தி