பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் ஆட்குறைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியில்இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அடுத்து என்ன செய்வது? எங்கே வேலை தேடுவது என்ற மனஉளைச்சல் ஏற்பட்டு வரும் நிலையில் மாதம் 4 லட்சம் சம்பளம் கொடுப்பதாக சொல்லியும் இங்கு இரு இடத்தில் விண்ணப்பிக்க ஆள் இல்லையாம்.
ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன் கடற்கரைக்கு அருகே வடக்குக் கடலில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் வேலைக்காக ஆள் தேவை என்ற அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டுள்ளனர். கடல் பகுதியில் அமைந்துள்ள இந்த பெரிய தொழிற்சாலையில் கிணறுகள் தோண்ட, எண்ணெய் மற்றும் எரிவாயுவை பிரித்து எடுக்க மற்றும் சுத்திகரிக்க வேண்டும்.
அதன் பிறகு அந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை நிலத்துக்கு கொண்டு வந்து சேமிக்க வேண்டும். இந்த வேலைக்காகத் தான் ஆட்களை எடுக்கிறார்கள். இந்த பணிக்காக பணியமர்த்தப்படும் நபர்கள் தினமும் ரூ.36,000 அடிப்படை ஊதியத்துடன் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளில் இரண்டு 6 மாத ஷிப்டுகள் வேலை செய்தால் அவர்களுக்கு ஒரு கோடி வரை சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இரண்டு வருடத்தில் 1 வருடம் தான் கடலில் வேலை நாட்கள். அதற்கும் 1 கோடி சம்பாதிக்கலாம் என்றால் பெரிது தானே.
இந்த சம்பளத்தோடு மாதத்திற்கு ஒருமுறை 1 வாரம் வரை விடுப்பு எடுக்கொள்ளலாம். அது உடல்நலம் சரி இல்லாத காரணத்திற்காக வழங்கப்படுகிறது. நல்ல சம்பளம், லீவ் வேறு, வருடத்திற்கு 6 மாதம் தான் வேலை, 6 மாதம் விடுமுறை என்று எல்லாம் சொல்றாங்களே நாமும் விண்ணப்பிக்கலாம் என்று தானே நினைக்கிறீர்கள்.
ஆனால், இந்த வேலையில் அனைவரும் சேர்ந்து விட முடியாது. அதற்கு தனி தகுதிகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் அடிப்படை கடல்சார் பாதுகாப்பு மற்றும் அவசர பயிற்சி, கடல்சார் அவசர பயிற்சி உள்ளிட்ட சில அடிப்படை பயிற்சிகளை முடித்திருக்க வேண்டும். அதேபோல மருத்துவப் பயிற்சியுடன் இதர தொழில்நுட்பப் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.
அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட 1 மாத காலம் ஆகியும் 5 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளது. அதற்கு காரணம் கடலுக்குள் வேலை, தனியாக வேலை செய்ய வேண்டும், ரிஸ்க் அதிகம் என்பதால் தான். வேலை இல்லா திண்டாட்டம் இருந்து வரும் போதிலும் உயிரை பணயம் வைத்து இந்த வேலைக்கு போக வேண்டுமா என்று யோசித்து இந்த வேலைக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பம் போட்ட 5 பேருமே வேலையில் சேர்வார்களா என்ற சந்தேகம் நிறுவனத்திற்கே உள்ளதாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job vacancies, Scotland