Home /News /international /

நேபாள விமான விபத்து மீட்பு பணிகள் தீவிரம் - இதுவரை 14 உடல்கள் மீட்பு

நேபாள விமான விபத்து மீட்பு பணிகள் தீவிரம் - இதுவரை 14 உடல்கள் மீட்பு

நொறுங்கிய விமானத்தின் பாகங்கள்

நொறுங்கிய விமானத்தின் பாகங்கள்

விமான விபத்தில் பயணம் செய்த நான்கு இந்தியர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

    நான்கு இந்தியர்களுடன் பயணித்து விபத்துக்குள்ளான நேபாள விமானத்தை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நேபாள ராணுவம் கூறியதாவது, நேபாளத்தின் முஸ்டாங் மாவட்ட மலைத் தொடர் அருகே விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 22 பேரும் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

    இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்படுகிறது. சிலரின் உடல் அடையாளம் காண முடியாத அளவிற்கு மோசமாக சிதைந்துள்ளது. மீதமுள்ளவர்களை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்த விமான விபத்துக்கு மோசமான வானிலையே காரணமாக இருக்கும் என கருதப்படுகிறது.

    விமான விபத்தின் பின்னணி

    நேபாள நாட்டில் நேற்று காலை 22 பயணிகளை ஏற்றி சென்ற சிறிய விமானம் மாயமானது. டாரா ஏர் 9 NAET என்ற இந்த விமானம் போக்ரா பகுதியில் இருந்து ஜோம்சோம் என்ற இடத்திற்கு பயணித்தது. காலை 9.55 மணி அளவில் கிளம்பிய விமானம் புறப்பட்ட 20 நிமிடத்திலேயே தரைப் பகுதியுடன் தொடர்பை இழந்தது.

    இந்த விமானத்தில் நேபாள நாட்டு மக்களுடன், நான்கு இந்தியர்களும் 3 ஜப்பானியர்களும் பயணித்துள்ளனர். விமான ஊழியர் குழு உள்பட மொத்தம் 22 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். பயணம் செய்த இந்தியர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். மும்பையை சேர்ந்த அசோக் குமார் அவரது மனைவி வைபவி இருவரின் குழந்தைகளான தனுஷ் மற்றும் ரித்திகா ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

    இதையும் படிங்க: உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் ஞாபக மறதி - பதறிய கணவர்

    விபத்து நடைபெற்ற முஸ்தாங் மாவட்டத்தின் உள்ளூர் கிராமவாசிகள் விபத்தை கண்டு காவல்துறையிடம் தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் தான் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விரைவில் விரிவான விசாரணை நடைபெறும் என நேபாள விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Flight Accident, Flight Crash, Nepal

    அடுத்த செய்தி