முகப்பு /செய்தி /உலகம் / No Smoking Day 2022 : வரலாறு, முக்கியத்துவம் குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

No Smoking Day 2022 : வரலாறு, முக்கியத்துவம் குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

 No Smoking Day

No Smoking Day

No Smoking Day 2022 : கடந்த 1984-ஆம் ஆண்டில் நோ ஸ்மோக்கிங் டே முதல் முறையாக இங்கிலாந்தில் அனுசரிக்கப்பட்டது.

புகைப்பழக்கம் நம் உடல் நலத்திற்கு கேடு என்ற இந்த பழமொழியை நம் வாழ்வில் பலமுறை கேட்டிருப்போம். சிகரெட், பீடி மற்றும் பிற புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் நபரின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கின்றன. புகைப்பழக்கத்தால் நுரையீரல் பலவீனமடைகிறது மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட பல சுவாச நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

புகைபிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மற்றும் அப்பழக்கத்தை கைவிட அவர்களை ஊக்குவிக்க ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது புதன்கிழமை புகைப்பிடிக்காத தினம் (No Smoking Day) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று (மார்ச் 9) நோ ஸ்மோக்கிங் டே அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் யுனைட்டட் கிங்டமில் முக்கியமாக கொண்டாடப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படி, புகைபிடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.2 மில்லியன் அகால மரணங்கள் ஏற்படுகின்றன.

நோ ஸ்மோக்கிங் டே - வரலாறு: நாட்டு மக்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதை யுனைட்டட் கிங்டம் கண்டது. எனவே கடந்த 1984-ஆம் ஆண்டில் நோ ஸ்மோக்கிங் டே முதல் முறையாக அங்கு அனுசரிக்கப்பட்டது. முன்னதாக இந்நாள் ஆஷ் வெட்னஸ்டே (Ash Wednesday) தொடங்கும் மார்ச் மாத முதல் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இருப்பினும் காலப்போக்கில் இந்த நாள் இரண்டாவது புதன்கிழமைக்கு மாறியது. இப்போது யுனைட்டட் கிங்டம் மற்றும் பிற நாடுகளிலும் வருடாந்திர நிகழ்வாக நோ ஸ்மோக்கிங் டே கொண்டாடப்படுகிறது.

முக்கியத்துவம்: பல ஆண்டுகளாக புகைப்பழக்கம் கொண்டவர்கள் சட்டென்று அப்பழக்கத்தை நிறுத்தினால், அவர்களின் உடல் புகையிலைக்கு ஏங்கும் விதத்தில் செயல்படுகிறது. தொடர்ந்து புகைபிடிப்பவர்களின் உடல் மற்றும் மனம் அதற்கு அடிமையாகிவிடுவதால், புகைபிடிப்பதை கைவிடுவதற்கு நிறைய அர்ப்பணிப்பு மற்றும் ஊக்கம் தேவைப்படுகிறது. எனவே இந்த கொடிய பழக்கத்தை விட்டுவிடுவதற்கான முதல் படியை அனைவரும் எடுத்து வைக்க இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த நாள் மோசமான பழக்கத்தை விட்டுவிட விரும்பும் பத்து பேரில் ஒருவருக்கு பயனுள்ளதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் இந்த நோ ஸ்மோக்கிங் டே நாளில் நீங்களாகவே முன் வந்து புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுங்கள். புகைபிடிப்பதை விட்டுவிடுவது படிப்படியாக ஒருவரின் இதயம் மற்றும் நுரையீரலின் ஆரோக்கியத்தை குணப்படுத்த உதவுகிறது.

Also Read : ஆண்களின் விந்தணுக்கள் குறைய என்ன காரணம்..? இதற்கான சிகிச்சை முறைகள் என்ன..?

தீம்: புகைப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பவர்கள் முற்றிலுமாக புகைபிடிப்பதை விட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நாள் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளுடன் இந்த சுகாதார விழிப்புணர்வு தினம் நடைபெறும். இந்த ஆண்டிற்கான தீம் " புகைபிடிப்பதை நிறுத்துவது மன அழுத்தமாக இருக்க வேண்டியதில்லை" (quitting smoking doesn’t have to be stressful) ஆகும். இந்த தீமின் படி, புகைபிடிப்பதை விட்டுவிட விரும்புபவர்களை அமைதிப்படுத்துவது மற்றும் இந்த செயல்முறையால் மன அழுத்தம் கொள்ள தேவையில்லை என்பதை அவர்களுக்கு தெரிவிப்பதில் கவனம் செலுத்தப்படும்.

First published:

Tags: Quit Smoking, Smoking