• HOME
 • »
 • NEWS
 • »
 • international
 • »
 • 'கால் தெரியும்படி செருப்பு அணியக்கூடாது': ஆப்கானில் பெண்கள் மீது மீண்டும் இறுகும் பிடி!

'கால் தெரியும்படி செருப்பு அணியக்கூடாது': ஆப்கானில் பெண்கள் மீது மீண்டும் இறுகும் பிடி!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ள பகுதிகளில் பெண்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோருக்கு கடும் கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருவதாக ஐ.நா. பொதுச் செயலாளர்  ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு இடங்களையும் பிடித்து முன்னேறிவரும் நிலையில், பெண்களுக்கு எதிரான பிடி மீண்டும் இறுகத் தொடங்கியுள்ளது.

  அமெரிக்க படைகள் வெளியேற்றத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருக்கிறது. ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. தலிபான்களை சமாளிக்க முடியாமல் அரசு படைகள் திணறி வருகின்றன. தலிபான்களோ முக்கிய நகரங்களை கைப்பற்றி முன்னேறி வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தலிபான்கள் வசம் ஆப்கானின் பெரும்பகுதி சென்றுவிட்ட நிலையில், இதில் அதிகம் பாதிப்புக்கு  உள்ளாகி இருப்பது பெண்கள்தான்.  ஆப்கானின் ஹேரத் நகரைச் சேர்ந்தவர் ஜாஹிரா. தலிபான் ஆதிக்கம் இல்லாத பகுதியில் பிறந்த வளர்ந்தவர் என்பதால் கல்வி கற்பதிலும் சுதந்திரமாக இருப்பதிலும் அவருக்கு எவ்வித பாதிப்பும் வந்ததில்லை. தற்போது உள்ளூர் என்.ஜி.ஓ. ஒன்றில் இணைந்து பாலின சமத்துவத்திற்காக பணியாற்றி வருகிறார்.

  தற்போது ஜாஹிரா வசித்துவரும் பகுதியை தலிபான்களை கைப்பற்றி தங்கள் கொடியையும் ஏற்றியுள்ளனர். இதையடுத்து ஜாஹிரா, அவரது தாயார், தங்கைகள் மட்டுமின்றி அங்குள்ள பெண்கள் அனைவருமே வீடுகளுக்கு முடங்கியுள்ளனர்.

  இத்தனை ஆண்டுகள் கடினப்பட்டு கற்று முன்னேறியுள்ள தன்னால் எப்படி வீடுகளுக்குள் மறைந்து வாழ முடியும் என்று பெரும் அதிர்ச்சியுடன் ஜாஹிரா கூறியுள்ளதாக அசோசியேட் பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.  தற்போது மூன்றில் இரண்டுக்கும் மேலாக பகுதிகளை கைப்பற்றியுள்ள தலிபான்கள் காபூல் நகரை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றனர்.

  ஆப்கானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில்,கடந்த மே மாத மத்தியில் இருந்து இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.  இவர்களில் 80 சதவீதம் பேர் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.

  மேலும் படிக்க: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்தியா முழுவதும் தடை!


  தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ள பகுதிகளில் பெண்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோருக்கு கடும் கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருவதாக ஐ.நா. பொதுச் செயலாளர்  ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.  குறிப்பாக பெண்களின் உரிமைகள் முழுவதும் துடைத்து எடுக்கப்படும் ஆச்சமூட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

  இதையும் படிங்க: நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி- அமெரிக்கா முடிவு


  2001ம் ஆண்டுவரை தலிபான்களின் பிடியில் 5 ஆண்டுகள் ஆப்கானிஸ்தான் இருந்தது. அப்போது, பெண்கள் படிக்கவும், வேலைக்கு செல்லவும்,  ஆண் துணை இல்லாமல் வீட்டை விட்டு தனியாக செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது.  இந்நிலையில், கடந்த வாரம் கால் தெரியும்படி செருப்பு அணிந்ததற்காக சில பெண்களை தலிபான்கள் கண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், சந்தைகளுக்கு ஆண் துணை இல்லாமல் தனியாக செல்லக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் வளர்ச்சி அடைந்து வந்த நிலையில், தலிபான்களின் எழுச்சியால் மீண்டும் வீடுகளுக்குள் அடைபட்டு கிடக்கும் இருண்ட காலத்திற்கு அவர்கள் செல்ல தொடங்கியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Murugesh M
  First published: