பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர ஆல்-ரவுண்டருமான முகமது ஹபீஸ், பாகிஸ்தானின் சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை டிவிட்டரில் பதிவிட்டு, இத்தகைய மோசமான நிலைமைக்காக பாகிஸ்தான் அரசியல் தலைவர்களை வசைபாடினார்.
பாகிஸ்தானில் அந்நிய செலவாணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நெருக்கடி தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஹபீஸ் தன் ட்வீட்டில், லாகூரில் உள்ள எந்த பெட்ரோல் நிலையத்திலும் பெட்ரோல் கிடைக்கவில்லை என்று சாடினார், அதாவது, "லாகூரில் உள்ள எந்த பெட்ரோல் பங்கிலும் பெட்ரோல் கிடைக்கவில்லையா? ஏடிஎம் இயந்திரங்களில் பணமில்லையா? ஒரு சாமானியர் ஏன் அரசியல் முடிவுகளால் பாதிக்கப்பட வேண்டும்," என்று சாடியுள்ளார்.
பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த சூழலில் பொருளாதாரம் பற்றி பேசாத முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன் ஆட்சி கவிழ்ப்பில் சதி இருப்பதாக பேரணி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் நிலவி வரும் சூழலை முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
லாகூரில் என்ன நடக்கிறது? பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் இல்லை. ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லை. அரசியல் வாதிகள்
எடுக்கும் முடிவுகளால் பொதுமக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? என்று சாட்டையடி கொடுத்துள்ளார்.
இந்த டுவிட்டர் பதிவை வெளியிட்ட அவர், இம்ரான் கான், மரியம் ஷரிப், பில்வால் பூட்டோ, பிரதமர் ஷெபாஷ் ஷரிப் உள்ளிட்டவர்களை டேக் செய்துள்ளார்.
பாகிஸ்தானில் தற்போது அரசியல் பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. லாகூரில் புதன்கிழமை (மே 25) இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) ஆதரவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. புதிய தேர்தலைக் கோருவதற்காக தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு வருவதைத் தடுக்க, பாகிஸ்தான் காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியது, தடியடி நடத்தியது மற்றும் பதவி நீக்கப்பட்ட பிரதமரின் ஆதரவாளர்களை தடுத்து நிறுத்தியது இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.