பஞ்சமர்கள் ஒரு இடத்தைக்கூட பெற முடியவில்லை - ரவிக்குமார் எம்.பி

ரவிக்குமார், பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களில் பஞ்சமர்கள் 10 பேராவது இடம்பெறுவார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 • Share this:
  இலங்கையின் 8-வது நாடாளுமன்றம் இம்மாதம் 2-ஆம் தேதி கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது. இம்மாதம் 12-ஆம் தேதியிலிருந்து 19-ஆம் தேதி வரை வேட்புமனு ஏற்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

  இந்நிலையில், பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களுள் பஞ்சமர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாததை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் விமர்சித்துள்ளார்.

  ”இலங்கையில் வசிக்கும் தமிழர்களில் 50%-க்கு மேல் இருக்கும் பஞ்சமர்களால் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தைக்கூட பெற முடியவில்லை” என்று தனது ட்விட்டர் பதிவொன்றில் கூறியிருந்த அவர், எதிர்வரும் தேர்தலிலாவது இந்த நிலை மாறுமா என்றும் பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களில் பஞ்சமர்கள் 10 பேராவது இடம்பெறுவார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

  Also see:
  Published by:Rizwan
  First published: