Home /News /international /

omicron: ஒமைக்ரான் வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டாம்; ஆனால் தயாராக இருங்கள்: உலக சுகாதார மையம்!

omicron: ஒமைக்ரான் வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டாம்; ஆனால் தயாராக இருங்கள்: உலக சுகாதார மையம்!

ஒமைக்ரான்

ஒமைக்ரான்

ஒமைக்ரான் (Omicron) தொற்று நிச்சயம் பரவும் என நம்புவதாக கூறும் உலக சுகாதார மையம், அதற்கு ஏற்பட்ட உலக நாடுகள் தங்களையும் தங்களின் சுகாதார அமைப்பையும் தயார்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஒமைக்ரான் திரிபு கொரோனா தொற்று இதுவரை 38 நாடுகளுக்கும் மேலாக பரவியுள்ளது. எனினும் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று தொடர்பாக அச்சப்பட தேவையில்லை என்று அறிவுறுத்தியுள்ள அதேவேளையில், இதனை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படியும் கூறியுள்ளது.

    தென் ஆப்ரிக்கா மற்றும் போஸ்ட்வானாவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் திரிபு தற்போது 38 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. எனினும் இதுவரை  ஒமைக்ரான் பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்றும் கூறியுள்ளது.

    மேலும், ஒமைக்ரான் திரிபு எந்தளவு தொற்று பாதிப்பு உடையது, இது மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துகிறதா மற்றும் சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் எவ்வளவு பயனுள்ளவை என்பதை தீர்மானிக்க சில வாரங்கள் ஆகும் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.  உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றபோதிலும்,  அடுத்த சில மாதங்களில் ஐரோப்பாவின் மொத்த கொரோனா பாதிப்பில் பாதிக்கும் மேல் ஒமைக்ரான் தொற்றாக இருக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

    ஒமிக்ரான் தொற்று நிச்சயம் பரவும் என நம்புவதாக கூறும் உலக சுகாதார மையம், அதற்கு ஏற்பட்ட உலக நாடுகள் தங்களையும் தங்களின் சுகாதார அமைப்பையும் தயார்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.  உலக சுகாதார மையம் பொதுவாக பயண தடை விதிப்பதை ஏற்க மறுத்துள்ளது. தொற்றை எதிர்கொள்ளும் சுகாதார கட்டமைப்பு இல்லாத நாடுகள் வேண்டுமானால் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: குழந்தைகளுக்கு அதிக அளவில் பரவும் ஒமைக்ரான் கொரோனா திரிபு - மருத்துவ நிபுணர்கள் கவலை

    மிகவும் கவலைக்குரியதாக அறிவிக்கப்பட்ட டெல்டா திரிபு கொரோனாவே தற்போது முதன்மையானதாக உள்ளதாக  உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona, Omicron, WHO

    அடுத்த செய்தி