ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் 2021-22 இரண்டு ஆண்டு கால தற்காலிக உறுப்பினராக இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 2 கால உறுப்பினர் பதவியில் இரண்டாவது முறையாக கடந்த வியாழன் அன்று தலைமை இருக்கையை இந்தியா பெற்றுள்ளது.
பாதுகாப்பு கவுன்சில் மாதம் ஒரு முறை சுழற்சி முறையில் தனது தலைமை பதிவையை வெவ்வேறு உறுப்பு நாடுகளுக்கு வழங்கும் அப்படி, டிசம்பர் 1 2022 அன்று இந்தியாவிற்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. டிசம்பர் 31 2022 இந்த பதவிக்காலம் முடிவடையும்.
2021 தற்காலிக பதவி ஏற்ற இந்தியாவிற்கு ஆகஸ்ட் 2021 க்குப் பிறகு இரண்டாவது முறையாக UNSC தலைமைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது மாதம் இது. இந்தியா சார்பில் ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தலைமை பதவியை ஏற்றார்.
இதையும் படிங்க : உக்ரைனை எளிதில் வென்றுவிடலாம் என புதின் தப்புக்கணக்கு போட்டுள்ளார் - ஜோ பைடன் பரபரப்பு பேச்சு
நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் முதல் பெண் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் தந்து பதவியை ஏற்றவுடன் அவரிடம் இந்தியாவின் ஜனநாயக நிலை குறித்தும் பத்திரிக்கை சுதந்திரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ருச்சிரா, இந்தியா பழம்பெருமை வாய்ந்த தேசம். இந்திய ஜனநாயகத்தின் வேர்கள் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது. நாங்கள் எப்போதும் ஜனநாயகத்தின்படி தான் இருந்துள்ளோம். ஜனநாயகத்தில் என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை. அண்மைக் காலத்தை எடுத்துக் கொண்டாலும் ஜனநாயகத்தின் 4 தூண்களான சட்டமன்றம், நிர்வாகிகள், நீதித்துறை, ஊடகங்கள் என அனைத்துமே வலுவாக இருக்கின்றன என்றார்.
இதையடுத்து தலைமை தாங்கும் இந்த மாதத்தின் நிகழ்ச்சி நிரல்படி டிசம்பர் 14 அன்று சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மைக்கான புதுப்பிக்கப்பட்ட நோக்குநிலை மற்றும் டிசம்பர் 15 அன்று பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான பாதுகாப்பு கவுன்சிலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளுக்கு தலைமை தாங்க வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் நியூயார்க்கிற்கு செல்கிறார்
அதே நேரத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ஐநா கட்டிடத்தின்ல் வைக்கப்பட உள்ளது. UNHQ இல் மகாத்மாவின் சிற்பம் நிறுவப்படுவது முதல் முறையாகும். இது ஐநாவிற்கான இந்திய பரிசாக வழங்கப்படுகிறது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: United Nation