ஹோம் /நியூஸ் /உலகம் /

கல்யாணமும் வேண்டாம்... குழந்தைகளும் வேண்டாம்!- சிங்கிள்ஸ் வாழ்க்கையை விரும்பும் தென்கொரிய பெண்கள்

கல்யாணமும் வேண்டாம்... குழந்தைகளும் வேண்டாம்!- சிங்கிள்ஸ் வாழ்க்கையை விரும்பும் தென்கொரிய பெண்கள்

No Marriage இயக்கத்தினர்

No Marriage இயக்கத்தினர்

ஐநா அறிக்கையின் அடிப்படையில் தென்கொரியா மக்கள் தொகை அதிவேகத்தில் வீழ்ந்து வருவது அந்நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கல்யாணம், செக்ஸ் வாழ்க்கை, குழந்தைப்பேறு என எதுவும் வேண்டாம். சிங்கிள்ஸ் வாழ்க்கை முறையே மகிழ்ச்சியாக உள்ளதென்ற முடிவுக்கு தென் கொரிய பெண்கள் வந்துள்ளனர்.

இதனால், உலகளவில் கருவுறுதல் விகிதம் மிகவும் வீழ்ச்சி அடைந்த நாடாக தென்கொரியா உள்ளது. ஆணாதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்றவற்றுக்கு எல்லாம் அடித்தளம் அமைத்துத் தரும் கல்யாணத்தை வெறுப்பதாக அந்நாட்டு பெண்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ’No Marriage’ இயக்கத்தை முதன்முதலில் இரண்டு பெண்கள் தங்களது யூட்யூப் தளத்தில் அறிமுகம் செய்தனர்.

சில மாதங்களிலேயே இந்த இயக்கத்தின் கீழ் 37 ஆயிரம் பெண்கள் இணைந்தனர். இந்த இயக்கத்தின் மூலம் ஆண்கள், திருமணம், செக்ஸ், குழந்தைகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கலாம் என சக பெண்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்படுகிறது. இதற்கு பெண்கள் மத்தியில் பெரிய ஆதரவும் கிடைக்கிறதாம்.

ஐநா அறிக்கையின் அடிப்படையில் தென்கொரியாவில் மக்கள் தொகை அதிவேகத்தில் வீழ்ந்து வருகிறதாம். இது அந்நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையாக அந்நாட்டு அரசு பாலின சமத்துவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளதாம்.

தற்போது தென்கொரிய பெண்களில் வெறும் 44 சதவிகிதத்தினர் மட்டுமே திருமண ஆசை உள்ளவர்களாக இருப்பதாக அந்நாட்டு அரசின் ஆய்வு ஒன்று கூறுகிறது.

மேலும் பார்க்க: ட்விட்டர் ரசிகர்களுக்கு கோடிகளை அள்ளி வீசிய பிரபலம்... நிலவுக்குச் செல்ல தோழி வேண்டுமாம்!

First published:

Tags: Marriage