Home /News /international /

கொரோனா காரணமாக பள்ளிகளை மூடுவதில் நியாயமில்லை: உலக வங்கி கல்வி இயக்குனர்!

கொரோனா காரணமாக பள்ளிகளை மூடுவதில் நியாயமில்லை: உலக வங்கி கல்வி இயக்குனர்!

உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக வளாகங்களை திறந்து வைத்துவிட்டு, பள்ளிகளை மூடி வைத்திருப்பது என்பது அர்த்தமற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக வளாகங்களை திறந்து வைத்துவிட்டு, பள்ளிகளை மூடி வைத்திருப்பது என்பது அர்த்தமற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக வளாகங்களை திறந்து வைத்துவிட்டு, பள்ளிகளை மூடி வைத்திருப்பது என்பது அர்த்தமற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகளை மூடுவதில் நியாயமில்லை என்று உலக வங்கி கல்வி இயக்குனர் ஜெய்ம் சாவேத்ரா தெரிவித்துள்ளார். மேலும், இனி புதிய கொரோனா அலைகள் வந்தாலும் பள்ளிகளை மூடுவது என்பது கடைசி நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    பொதுவாகவே விடுமுறை என்றால் மாணவர்களுக்கு கொண்டாட்டம்தான். மழை என்றாலும், விழா என்றாலும் விடுமுறை என்ற அறிவிப்புக்காக காத்திருக்காத மாணவர்கள் இருக்க முடியாது. இது கற்றலில் உள்ள இறுக்கத்தை தளர்த்தி, உற்சாகத்தை உள்ளத்தில் சேர்த்து விடுகிறது.

    ஆனால், கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அசாதாரணமான விடுமுறைகள் கல்வி கற்றலில் பெரும் அச்சத்தை பெற்றோர் மத்தியில் உருவாக்கி உள்ளது. கல்வி வளாகங்களில் கற்றல் நிகழாத போது, வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் கற்க ஏற்பாடு செய்யப்பட்டாலும், அத்தகைய கற்றல் முறை ஆரம்ப கல்வி பயிலும் சிறார்களுக்கு பொருந்துமா..? கற்றல் முழுமை பெறுமா என்கிற அச்சம் தொற்றிக் கொள்கிறது.

    இதையும் படிங்க: மிகவும் சலிப்பான வேலையை கொடுத்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த நபர்! இழப்பீடு வழங்க உத்தரவு

    இந்த நிலையில்தான் கல்வித்துறையில் கொரோனா தாக்கத்தைக் கண்காணித்து வரும் உலக வங்கி கல்வி இயக்குனர் சாவேத்ரா, பள்ளிகள் பாதுகாப்பான இடமில்லை என்று கூறுவதற்கும், பள்ளிகளை திறப்பதால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாக கூறுவதற்கும்ம் எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் வரை காத்திருக்க வேண்டும் என்ற பொது கண்ணோட்டத்தில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

    மேலும், பள்ளிகளைத் திறப்பதற்கும், கொரோனா வைரஸ் பரவுவதற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. இரண்டையும் இணைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இதனை காரணம் காட்டி, பள்ளிகளை மூடுவதில் எந்த நியாயமும் இல்லை. இனி புதிய கொரோனா அலைகள் வந்தாலும் பள்ளிகளை மூடுவது என்பது கடைசி நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    அதேபோல், உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக வளாகங்களை திறந்து வைத்துவிட்டு, பள்ளிகளை மூடி வைத்திருப்பது என்பது அர்த்தமற்றது என்று அவர் கூறினார்.

    உலக வங்கியின் பல்வேறு உருவகப்படுத்துதல்களின்படி, பள்ளிகளை திறந்து வைத்திருக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளை விட, பள்ளிகளை மூடி வைத்திருப்பதால் ஏற்படும் ஆபத்தே அதிகம் ஆகும்.

    2020ம் ஆண்டில், நாம் அறியாமை எனும் கடலில் பயணித்துக் கொண்டிருந்தோம். அப்போது, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி என்னவென்று நமக்கு தெரியவில்லை, உலகின் பெரும்பாலான நாடுகளின் உடனடி எதிர்வினை என்பது பள்ளிகளை மூடுவதாக இருந்தது. அதன்பின்னர், நாம் 2020 பிற்பகுதியிலிருந்து, 2021 முழுவதும் பல அலைகளை கடந்துவிட்டோம். இதில், பல நாடுகள் பள்ளிகளை திறந்துள்ளன.

    மேலும் படிக்க: ரயிலில் இருந்து ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை: அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு பதிலடி

    இப்படி பள்ளிகளை திறந்ததன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை எங்களால் அறிந்துகொள்ள முடிந்தது. பல நாடுகளில் பள்ளிகள் மூடியிருந்த போதும் தொற்று பாதிப்பு உச்சமடைந்திருந்து. அதனால், வைரஸ் தொற்று பரவலில் பள்ளிகளின் பங்கு இல்லை என்பது தெளிவாக தெரியவந்துள்ளது.

    குழந்தைகள் ஒமைக்ரான் தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டாலும், இறப்பு மற்றும் நோய் தீவிரம் அரிதாகவே காணப்பட்டது. இதன்மூலம் குழந்தைகளுக்கான அபாயங்கள் குறைவு என்பது தெரியவந்துள்ளது.

    குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படாதது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, "குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பிறகே பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்ற நிபந்தனையை எந்த நாடும் வைக்கவில்லை. இதற்குப் பின்னால் எந்த அறிவியலும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் தொற்றுநோய் காரணமாக பள்ளி மூடல்களின் தாக்கம் பற்றிப் பேசிய சாவேத்ரா, "முன்பு நினைத்ததை விட தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது என்றும் கற்றல் குறைபாடு என்பது எதிர்பார்த்ததை விட அதிகமாக ஏற்படும். 10 வயது குழந்தையால் ஒரு வாக்கியத்தை வாசிக்கவும், புரிந்துக்கொள்ள முடியாமல் இருப்பது என்பதே கற்றல் குறைபாடு ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்தியா போன்ற நாடுகளில், தொற்றுநோய் பாதிப்புக்கு முன்பே கல்வியில் ஏற்றத்தாழ்வுகள் நிலவியது. கற்றல் குறைபாடும் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் இருந்தது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பள்ளிகள் இன்னும் மூடப்பட்டுள்ளன, இதில் ஒரு சில குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வரவே மாட்டார்கள்.

    இதுபோன்று குழந்தைகளுக்கு ஏற்படும் கற்றல் இழப்பை தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ளவே முடியாதது ஆகும். கற்றல் குறைபாட்டிற்கான சாத்தியங்கள் அதிகரித்து காணப்படும் நிலையால், இந்த தலைமுறை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், அவர்களது குடும்பங்களின் வருவாய் மற்றும் உலக பொருளாதாரத்தில் பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்" என்று அவர் கூறியுள்ளார்.

    மேலும் படிக்க: பூமியை நெருங்கி வரும் சிறிய கோள்.. நாசா எச்சரிக்கை!

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19, Lockdown

    அடுத்த செய்தி