• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் விலை - பிற நாடுகளின் நிலவரம் என்ன?

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் விலை - பிற நாடுகளின் நிலவரம் என்ன?

பெட்ரொல்ல்

பெட்ரொல்ல்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாத போதும் பெட்ரோல், டீசல் விலை மட்டும் பன்மடங்கு அதிகரித்துவருகிறது.

  • Share this:
    கச்சா எண்ணெய்யின் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லாத போதும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜூன் 5ம் தேதி கச்சா எண்ணெய்யின் விலை 39.55 டாலராக அதிகரித்த நிலையில், ஜூன் 6ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க தொடங்கியது. தற்போது கச்சா எண்ணெய்யின் விலை 3.49 டாலராக குறைந்துள்ளது.

    இருப்பினும், பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. ஜூன் 6ம் தேதி 75.54 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை தற்போது 83.63 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 23 நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 8.9 ரூபாய் அதிகரித்துள்ளது. ஜூன் 6ம் தேதி 68.22 ரூபாயாக இருந்த டீசல் தற்போது 77.72 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 23 நாட்களில் ஒரு லிட்டர் டீசல் விலை 9.50 ரூபாய் அதிகரித்துள்ளது.

    சர்வதேச அளவில் மிகக்குறைந்த விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது, வெனிசுலா தான். அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1.52ரூபாய். இதற்கு அடுத்தபடியாக, ஈரானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 6.12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவுதி அரேபியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 21.84 ரூபாய். பாகிஸ்தானில், 34.7 ரூபாயாக உள்ளது. அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 49.59 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Also see:

    இந்தியாவை பொறுத்தவரை தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 83.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக மும்பையில் 87.19 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மற்றொரு புறம், இந்தியாவை காட்டிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நாடுகளின் பட்டியலில், சிங்கப்பூர், ஜெர்மெனி, பிரான்ஸ், ஸ்வீடன், இத்தாலி போன்ற நாடுகள் உள்ளன. அந்தப் பட்டியலில் ஹாங்காங் முதலிட்டத்தில் உள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 169.76 ரூபாய்க்கு விற்கபடுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: