ஈரான் மீது தாக்குதல் இல்லை! டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பால் தணியும் போர் பதற்றம்

ஈரான் மீது தாக்குதல் இல்லை! டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பால் தணியும் போர் பதற்றம்
ட்ரம்ப்
  • News18
  • Last Updated: January 8, 2020, 11:04 PM IST
  • Share this:
ஈரான் மீது மேலும் தாக்குதல் நடத்த விரும்பவில்லை. அந்நாட்டின் மீது மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தளத்தின் மீது ஈரான் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியது. மேலும், இந்தத் தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 80 பேர் உயிரிழந்ததாகவும் அறிவித்தது. அதனால், இரண்டு நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் சூழல் உருவானது. அது உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தநிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ‘அமெரிக்க படை எல்லாவற்றுக்கும் தயாராக உள்ளது.

மத்திய கிழக்குப் பகுதிகளிலுள்ள எண்ணெய் வளங்கள் எங்களுக்குத் தேவையில்லை. உலக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்வதிலும், இயற்கை எரிவாயு உற்பத்தியிலும் நாங்கள் தான் முதலிடத்தில் உள்ளோம். அமெரிக்கா ஆற்றல் உற்பத்தியில் சுதந்திரத்தைப் பெற்றுள்ளது. ஈரானுடன் ஒப்பந்தம் செய்வதற்கு கட்டாயம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். அது, இந்த உலகம் மேலும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்க உதவும். ஈரானின் அணுஆயத ஒப்பந்தம் குறைபாடுடையது. சுலைமானி அமெரிக்கப் படைகளின் மீது புதுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார்.


நாங்கள், அவரை நிறுத்திவிட்டோம். ஈரான் கட்டாயம், ஆணுஆயுத கனவைக் கைவிட வேண்டும். மேலும், தீவிரவாதத்துக்கு துணைப்போவதையும் விடவேண்டும். யாரெல்லாம் அமைதியை விரும்புகிறார்களோ அவர்களுடனெல்லாம் அமைதியைத் தளுவுவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது. இறுதியாக ஈரான் நாட்டுத் தலைவர்களுக்கு மக்களும் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஈரான் மீது மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும். ஈரானின் தாக்குதலில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. அந்த தாக்குதலால் சிறிதளவு பாதிப்பே ஏற்பட்டது. அமெரிக்க படைத்தளத்தில் உள்ள வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர்’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: January 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading